மத்தியபிரதேசம்: இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் உயிரிழப்பு


மத்தியபிரதேசம்: இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் உயிரிழப்பு
x

இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சண்டையில் முடிந்தது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் தெவாஸ் மாவட்டத்தில் உள்ள கோலா குதான் கிராமத்தை சேர்ந்த கைலாஸ் கோத்ரா என்பவரின் குடும்பத்துக்கும் தேதாத் என்பவரின் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கைலாஸ் கோத்ரா மற்றும் தேதாத்தின் குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் துப்பாக்கி சண்டையில் முடிந்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இதில் கைலாஸ் கோத்ரா உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story
  • chat