வார ராசிபலன் 16.06.2024 முதல் 22.06.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

Update: 2024-06-16 08:44 GMT

இந்த வார ராசிபலன்:

மேஷம்

மனதில் உற்சாகம் பொங்கும் வாரம். இருந்தாலும் பல விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய கடமைகளை கூடுதல் குறைவின்றி செய்ய வேண்டிய காலகட்டம். மறைமுக எதிரிகளால் இந்த வாரம் மன உளைச்சல் ஏற்படும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வது, புதிய கடன் வாங்குவது ஆகியவற்றை இந்த வாரம் தள்ளி வைக்கவும். ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். உடல் நலனில் எச்சரிக்கை தேவை. வார இறுதியில் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இந்த வாரம் தொலைதூரப் பிரயாணங்களை தவிர்த்து விடுவதே நல்லது.

ரிஷபம்

பிரயாணங்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம் இது. தொழில், உத்தியோகத்துறையினருக்கு இது லாபகரமான காலகட்டம். அரசு காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெற்று மனம் மகிழ்வார்கள். சுபச்செலவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களது வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு விருந்து உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனதில் ஏற்பட்ட திடீர் உற்சாகத்தின் அடிப்படையில் பொருளாதார, வியாபார விஷயங்களில் உடனடி முடிவுகளை எடுத்துவிட வேண்டாம். வார இறுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மிதுனம்

அமைதியாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் பல விஷயங்களை செய்து முடிக்கும் வாரம் இது. தொழில், உத்தியோகஸ்தர்களுக்கு ஆதாயமாக உள்ள காலகட்டம். பங்குதாரர்களுடன் இணைந்து புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம். குடும்பம், குழந்தைகள் வழியில் மனதில் உற்சாகம் ஏற்படும். தடைபட்ட பல நல்ல விஷயங்கள் அனுகூலமாக நடந்தேறும் சூழ்நிலை அமையும். மீடியா துறையினருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். அனைத்து தரப்பினருக்கும் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வெளிவட்டார பழக்கவழக்கங்களால் நன்மைகள் ஏற்படும். சிலர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். புது வாகன யோகம், வேறு வண்டி, வாகன மாற்றம் ஏற்படும் காலகட்டம் இது.

கடகம்

அசையா சொத்துக்களால் லாபம் ஏற்படும் வாரம் இது. ஒரு சிலருக்கு அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகள் அகலும். தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரயாணங்களால் ஆதாயம் பெறுவார்கள். சிலர் புதியதாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். மனதில் ஒருவித அசதி ஏற்படுவதுடன், அவ்வப்போது ஏதாவது ஒரு குழப்பம் ஏற்பட்டு விலகும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மலரும் காலகட்டம். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். கலைத்துறையினர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்கள், எந்திர பிரிவு தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு முன்னேற்றமான காலகட்டம் இது.

சிம்மம்

எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும் காலகட்டம் இது. கலைத்துறையினர் சாதனை படைப்பார்கள். தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அனைத்து துறையினரும் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கை துணையோடு இருந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும். திருமண முயற்சிகளில் நீண்ட நாளாக இருந்த இழுபறிகள் விலகும். நண்பர்கள், தொழில்கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சொந்த விஷயங்கள் குறித்து நீண்டநாள் நண்பர்களிடம்கூட ஆலோசிப்பது கூடாது. அசையா சொத்துகளால் ஆதாயம் ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

கன்னி

எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய காலகட்டம் இது. ஒரு சிலர் புதிய தொழில் தொடங்கவும். ஒரு சிலருக்கு தொழிலை விரிவாக்கம் செய்ய சூழ்நிலை சாதகமாக அமைந்துள்ளது. இந்த வாரம் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். குடிநீர், உணவு, வெளியிடங்களில் தங்குவது, பயணங்கள் ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களை செயலில் காட்டும் வேகத்தை அடக்கி அமைதியாக இருக்க வேண்டிய வாரம் இது. மனதில் ஆன்மிக எண்ணங்கள் பொங்கி வரும். புதிய ஆபரணங்கள், வண்டிவாகனம், சொத்து சேர்க்கை ஏற்படும். ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் உள்ளவர்கள் ஆதாயம் அடைவார்கள். உங்களிடம் ஆலோசனை பெற பலரும் தேடி வருவார்கள்.

துலாம்

சுறுசுறுப்பாக காரியங்களில் இறங்கி வெற்றி அடையும் காலகட்டம் இது. புதிய தொடர்புகளால் முன்னேற்றம் பெறுவீர்கள். நீங்களே எதிர்பார்க்காத நபர்களும் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அதே சமயம் நண்பர்கள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். பொறியியல், கேட்டரிங் தொழில்துறையினருக்கு லாபகரமான வாரம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். விவசாயம், கால்நடை தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டம். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி சொந்தங்களால் ஆதாயம் ஏற்படும். புது ஆடை ஆபரண சேர்க்கை ஏற்பட்டு மனதில் குதூகலம் உண்டாகும்.

விருச்சிகம்

முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்களை தீட்டி செயல்படும் காலகட்டம். உத்தியோகஸ்தர்களுக்கு மனநிறைவான வாரம் இது. தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை எட்ட காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியதாக இருக்கும். ஐ.டி. துறையினருக்கு புதிய புராஜெக்டுகள் கிடைக்கும். பயணங்கள் அனுகூலமாக இருக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கை துணையின் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை முடிக்க பலமுறை அலைய வேண்டியதாக இருக்கும். திருமணம் சம்பந்தமான விஷயங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டு விலகும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நல்ல ஓய்வும், சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனுசு

பல நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும் வாரம் இது. தொழில் துறையினர் புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். குடும்ப உறவுகளுக்குள் கருத்து வேற்றுமைகள் ஏற்படும். அரசுவழி ஆதாயங்களை எதிர்பார்த்தவர்கள் அதை பெறுவார்கள். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிறிய விஷயங்களுக்குக்கூட பலமுறை அலைய வேண்டியதாக இருக்கும். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவான காலகட்டம்.

மகரம்

சிறிய முயற்சிகளும் பெரிய வெற்றிகளை தரும் வாரம் இது. தொழில்துறையினர் பல இடங்களுக்கும் சென்று தொழில் விரிவாக்க முயற்சிகளை முன்னெடுப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திருப்திகரமான காலகட்டம். பங்கு வர்த்தகம், கலைத்துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறையினர் திடீர் ஆதாயங்களை அடைவார்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்க யோகம் ஏற்படும். வாழ்க்கைத்துணை, குழந்தைகளின் பலநாள் விருப்பத்தை நிறைவேற்றி ஆச்சரியப்படுத்துவீர்கள். பொதுக்காரியங்களில் நண்பர்களோடு சேர்ந்து ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். விவசாயம், கால்நடைகளால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாளாக மனதை அரித்து வந்த ஒரு பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்

உழைப்பே தாரக மந்திரமாக ஆகும் காலகட்டம் இது. தொழில் துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகிய அனைத்து தரப்பினரும் காலநேரத்தை பார்க்காமல் உழைக்க வேண்டியதாக இருக்கும். சிறிய விஷயங்களையும் பலமுறை யோசித்த பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வாரம் இயன்றவரை இரவுப் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. வெளியூர் பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. நேரில்செல்லாமல் தொலைபேசியில் பேசியே பல காரியங்களை முடிக்க முயற்சிக்க வேண்டும். நீண்டநாளாக கடவுளிடம் பிரார்த்தனை செய்த விஷயம் கனிந்து வரும் காலம் இது. சிக்கல்களை எதிர்கொண்டு துணிச்சலாக செயல்படும் மனநிலை உருவாகும்.

மீனம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான வாரம். தொழில், வியாபாரத்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். ஒரு சிலர் எதிர்பாராவிதமாக தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்வார்கள். குடும்பங்களில் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சமூகத்தில் முக்கியஸ்தராக வலம் வருவீர்கள். குழந்தை வரம் வேண்டி சாமியிடம் பிரார்த்தனை செய்து வந்த பெண்மணிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். எந்த செலவையும் செய்யும் முன்னால் அதன் அவசியத்தை கணக்கிட்ட பின்பே செய்ய வேண்டும். கையில் உள்ள சேமிப்பு முற்றிலும் கரைந்து விடாமல் பெண்மணிகள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். மனதில் ஆன்மிக உணர்வுகள் ஏற்படும்.

 

Tags:    

மேலும் செய்திகள்