வார ராசிபலன் 04-08-2024 முதல் 10-08-2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

Update: 2024-08-04 01:31 GMT

இந்தவார ராசிபலன்:

மேஷம்

பொறுமையாக இருந்து வெற்றி பெறவேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் உழைப்புக்கு ஏற்ற ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். ரியல்எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் கவனமாக செயல்பட வேண்டும். பணிபுரியும் பெண்மணிகள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கலைத்துறையினர் தங்களுடைய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். குடும்ப உறவுகளிடம் இந்தவாரம் வழக்கத்தைவிட அதிகமாக அனுசரித்து செல்லவேண்டும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் சம்பந்தமாக மனதில் அதிருப்தி ஏற்படும். பொருளாதார முதலீடுகளை இன்னும் சில காலம் தள்ளிவைக்க வேண்டும்.

ரிஷபம்

துல்லியமாக திட்டமிட்டு செயல்பட்டுகாரிய வெற்றி அடையவேண்டிய வாரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் அதிகப்படியான வேலைசுமை ஏற்படும். வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். அரசியல் மற்றும் அரசாங்க சம்பந்தமான விஷயங்கள் மேலும் தாமதமாகும். ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய காத்திருக்க வேண்டும். கலை மற்றும் ஊடகத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பொருளாதாரம் பலசிக்கல்களுக்குப்பிறகு வந்து சேரும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் வழியில் மன உளைச்சல் ஏற்படும். வெள்ளி,சனி ஆகிய இருநாட்களில் இரவு பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

மிதுனம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும் காலகட்டம் இது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களைப்பற்றி என்னநினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் எதிர்பார்த்த ஆதரவு உண்டு. ஷேர் மார்க்கெட் துறையினர் துணிகர முதலீடுகளை இந்தவாரம் தவிர்க்கவேண்டும். பயணங்கள் காரிய வெற்றி அளிக்கும். குடும்பரீதியாக துணிச்சலாக சில முடிவுகளை எடுக்கவேண்டும். ஆன்லைன் பணபரிவர்த்தனைகளில் மிககவனமாக இருக்க வேண்டும். எந்தவிஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும்.

கடகம்

உற்சாகம் தரும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், தொழில்துறையினர், ரியல்எஸ்டேட் துறையினர் ஆகியோருக்கு லாபகரமான வாரம் இது. கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். இல்லத்தரசிகள் விசேஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். வண்டி வாகன பராமரிப்பு செலவு இந்தவாரம் உண்டு. பழைய கடன்களில் ஒரு பகுதியை அல்லது முழுவதுமாக திருப்பி அடைக்கும் வாய்ப்பு ஏற்படும். செலவுக்கு ஏற்றவரவு இருக்கும். உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டு சிகிச்சையால் குணமாகும். ஒரு சிலருக்கு தங்கள் துறையின் மூலம் புதிய வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்

நிதானமாக செயல்பட்டு உங்களை நிரூபிக்க வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் எதிர்பார்த்த நன்மையை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையினர், ஷேர்மார்க்கெட் துறையினர் இந்தவாரம் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வரவுக்கு மீறிய செலவினங்கள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் உருவாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடப்பதில் கால தாமதம் ஏற்படும். சிக்கலான நேரங்களில் நண்பர்கள் உதவிக்கு வருவார்கள். அரசு காரியங்களில் காலதாமதம் ஏற்படும். ஆன்லைன் பணபரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

கன்னி

சிக்கனமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்வார்கள். கலைத்துறையினர் கஷ்டப்பட்டு வெற்றி அடைவார்கள்.ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை செய்வது கூடாது. கையில் உள்ள பணம் கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கு செலவாகும். குடும்ப உறவுகள் மற்றும் பொது விஷயங்களில் அமைதியாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் குடும்பத்தார் விஷயங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பிரிவினருக்கு இந்தவாரம் எதிர்பாராத ஆதாயம் உண்டு.

துலாம்

மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாகும் காலகட்டம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், ரியல்எஸ்டேட் மற்றும் ஷேர்மார்க்கெட் துறையினர் இந்தவாரம் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். முதலீடுகள், பயணங்கள், சுபகாரிய பேச்சு ஆகியவற்றை சிறிதுகாலம் தள்ளிவைக்கவும். அனைத்து பிரிவினரும் வழக்கமான காரியங்களில் மட்டும் ஈடுபட வேண்டும். வெள்ளி, சனி இரு நாட்களில் இரவு பிரயாணங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். உடல் நலபாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். பழைய கடன்கள் அடைபடும் காலகட்டம். தொலைபேசி உரையாடல்கள், ஆன்லைன் பணபரிவர்த்தனை ஆகியவற்றில் எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்

அமைதியான வாரம் இது. கடந்த காலமுயற்சிகள் பலன் அளிக்கும் காலகட்டம். வியாபாரிகள், தொழில்துறையினர் உழைப்புக்கேற்ற ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பொறுப்புகளால் மன உளைச்சல் அடைவார்கள். கலைத்துறையினர் துணிச்சலாக செயல்பட்டு வாய்ப்புகளை பெறுவார்கள். ரியல்எஸ்டேட் மற்றும் ஷேர்மார்க்கெட் துறையினருக்கு நன்மைகள் உண்டு. பழைய கடன்கள் தீரும். மறைமுக எதிரிகள் மறைவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி தேடிவரும். புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகம் ஒரு சிலருக்கு உண்டு. இல்லத்தரசிகளுக்கு ஆடை ஆபரணசேர்க்கை ஏற்படும். அரசியல் மற்றும் அரசாங்க காரியங்களில் அனுகூலம் உண்டு.

தனுசு

உழைப்பு என்பதை தாரகமந்திரமாக கொள்ளவேண்டிய காலகட்டம். தொழில்துறையினர், வியாபாரிகள் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் மற்றவர்களை நம்புவது கூடாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடங்களில் தேவையற்ற சிக்கல்கள் உருவாகும். திடீர் செலவினங்களால் கையில் உள்ள சேமிப்பு கரையும். பயணங்கள் எதிர் பார்த்த வெற்றியைதரும். அரசாங்க காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டு விலகும். ஆன்லைன் பணபரிவர்த்தனைமற்றும் முதலீடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மனதில் விருப்பம் இல்லாவிட்டாலும் எதிர்கால நலன் கருதிபல விஷயங்களை செய்யவேண்டும்.

மகரம்

மனதில் சம நிலையோடு செயல்பட வேண்டிய காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டும். போட்டியாளர்களால் கலைத் துறையினருக்கு பலவாய்ப்புகள் தடைபடும். காரிய வெற்றி அடைவதில் அதிக அலைச்சல் ஏற்படும். இல்லத்தரசிகள் மன அமைதியோடு இருக்க வேண்டும். புதிய கடன்வாங்கி பழைய கடன்களை அடைக்கும் சூழல் ஏற்படும். சிக்கல்கள் நிறைய இருந்தாலும் மன துணிச்சலோடு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். சமூகம் மற்றும் பொதுகாரியங்களில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகள் தாமாகவே விலகிச்செல்வார்கள்.

கும்பம்

மன அமைதியை கடைபிடிக்க வேண்டிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் உழைப்புக்கு ஏற்ற ஆதாயம்பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செலவினங்கள்வரவுக்கு மீறி ஏற்படும். கலைத் துறையில் இருப்பவர்கள் புதிய நபர்களால் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். பயணங்களால் உடலில் அசதி ஏற்படும். உறவினர்களுக்கு பண உதவி செய்யவேண்டிய சூழல் ஏற்படும். நண்பர்கள் தேடிவந்து உதவிசெய்வார்கள். இல்லத்தரசிகள் துணிச்சலாக செயல்பட வேண்டிய காலகட்டம். வீடு, மனை, வண்டி, வாகனம் ஆகியவற்றில் மாற்றங்கள் உருவாகக்கூடிய காலகட்டம் இது. வாழ்க்கைத்துணையிடம் எந்த ஒரு விஷயத்திலும் வாக்கு வாதங்களை தவிர்த்து விடவும்.

மீனம்

புதிய நம்பிக்கைகள் மனதில் ஏற்படும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் உழைப்புக்கு ஏற்ற ஆதாயம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகளும் மதிப்பும் ஏற்படும். சீருடைபணியாளர்கள் பதவி உயர்வோடு பணியிட மாற்றம் பெறுவார்கள். ரியல்எஸ்டேட் மற்றும் ஷேர்மார்க்கெட் துறையினர் இந்தவாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். கலைத்துறையினர் மறைமுக எதிர்ப்புகளால் கவலை அடைவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையோடு அனுசரித்து செல்லவேண்டும். இல்லத்தரசிகள் சிக்கனமாக செயல்பட வேண்டிய வாரம் இது. அரசியல் மற்றும் அரசாங்க காரியங்களில் உள்ள தடைகள் விலகும்.

 

Tags:    

மேலும் செய்திகள்