சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது

Update: 2024-09-28 07:00 GMT

சென்னை,

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (28.09.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில்,  சென்னை புறநகர் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்