இன்றைய ராசிபலன் - 22.06.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update:2024-06-22 08:29 IST

இன்றைய பஞ்சாங்கம்:

22.6.2024 குரோதி வருடம் ஆனி மாதம் 8-ந் தேதி சனிக்கிழமை.

பவுர்ணமி திதி காலை 7.22 க்கு மேல் பிரதமை திதி.

மூலம் நட்சத்திரம் இரவு 7. 03 க்கு மேல் பூராடம் நட்சத்திரம். சித்தயோகம் கீழ்நோக்குநாள்.

நல்லநேரம் காலை: 7.30 - 8.30

நல்லநேரம் மாலை : 3.30 - 4.30

ராகுகாலம் காலை: 9.00 - 10.30

எமகண்டம் மதியம் : 1.30 - 3.00

குளிகை காலை :  6.00 - 7.30

சூலம் : கிழக்கு

சூரிய உதயம் : 6.04

சந்திராஷ்டமம்: கிருத்திகை, ரோகிணி 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.

ரிஷபம்

தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். நிதானத்தைக் கடைப்பிடித்தால் நிம்மதி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

மிதுனம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். திருமணத் தடை அகலும்.

கடகம்

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வருவதற்கான வாய்ப்பு உண்டு.

சிம்மம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும்.

கன்னி

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். மாற்றினத்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நாடாளும் நபர்களின் நட்பு உண்டு.

தனுசு

லாபகரமான நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம்

எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி மாறும். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம். மாலைப்பயணம் மகிழ்ச்சி தரும். வரன்கள் வாயில் வந்து சேரும்.

கும்பம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். அயல்நாட்டு அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மீனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையில் வரலாம்.

 

Tags:    

மேலும் செய்திகள்