இன்றைய ராசிபலன் - 08.01.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-01-08 06:40 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் மார்கழி மாதம் 24-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 04.35 வரை அஸ்வினி பின்பு பரணி

திதி: இன்று பிற்பகல் 02.16 வரை நவமி பின்பு தசமி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 09.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 04.45 - 05.30

ராகு காலம் மாலை: 12.00 - 01.30

எமகண்டம் காலை: 07.30 - 09.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 06.30 - 07.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: உத்திரம், அஸ்தம்

ராசிபலன்:

மேஷம்

மனதிற்கு பிடித்தவைகளை செய்வீர்கள். பணவரவில் பஞ்சமில்லை. சமூக ஆர்வலர்கள் சாதனைப் படைப்பர். தடைபட்ட வேலைகளை சட்டென்று முடிப்பீர்கள். தேவையில்லாத மனபயம் விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரரால் நன்மை விளையும். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும். அரசியலில் இருப்போர் தலைமைக்கு நெருக்கமாவீர்கள. பெற்றோரின் கனவு பலிக்கும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உறவினர்களால் நன்மை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். வரவேண்டிய பணம் வசூலாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

உத்திரம், அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

தனியார் தொழில் அதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத் தொகை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். சகோதரியிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தங்கள் வேலையாட்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். நினைத்த காரியம் நிறைவேறும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

பிள்ளைகளுக்காக சேமிக்க துவங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஏற்றம் அடையும். நல்ல வேலை ஆட்கள் அமைவர். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்தவாறே வீடு வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை



Tags:    

மேலும் செய்திகள்