இன்றைய ராசிபலன் - 09.01.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-01-09 08:51 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் மார்கழி மாதம் 25-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03.05 வரை பரணி பின்பு கிருத்திகை

திதி: இன்று பிற்பகல் 12.03 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம் மாலை: 10.30 - 11.30

ராகு காலம் பிற்பகல்: 01.30 - 03.00

எமகண்டம் காலை: 06.00 - 07.30

குளிகை காலை: 09.00 - 10.30

கௌரி நல்ல நேரம்: காலை 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம்: மாலை 06.30 - 07.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டம்: அஸ்தம், சித்திரை

ராசிபலன்:

மேஷம்

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும். நீண்ட காலமாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் உண்டு. புதிய தொழில் துவங்க வழியுண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களிடையே அளவோடு பழகுவது நல்லது. உப தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு. மாமியார் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

வீட்டில் சுப காரியம் நடக்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பழைய கடன்கள் அடைபடும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. பயணங்களின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கடகம்

பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் குறிக்கோள் நிறைவேறும் நாளாக அமையும். வாழ்க்கையின் முக்கியத் தருணமாக அமையும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். தங்களின் பொதுப்பணி மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகம் சாதகமாக இருக்கும். வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

அஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. அக்கம் பக்கத்தினர், தோழிகளிடம் பெண்கள் அளவோடு பழகுவது நல்லது. நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. தேகம் பளிச்சிடும். பேச்சாளர்களுக்கு பாராட்டும், மதிப்பும் கூடும். கணினி துறையைச் சார்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மகரம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். இளம் பெண்கள் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரிகளுக்கு நிதானம் தேவை. இல்லாவிட்டால் பொருள் இழப்பு உண்டாகலாம். ஆவணங்களை சரிபார்ப்பது நலம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

தாயார் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும் நாளாக அமையும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். நண்பர்களிடையே கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மீனம்

கமிஷன் துறையை சார்ந்தவர்கள் அதிக லாபம் பெறுவர். சொத்து விற்பது, வாங்குவது சம்பந்தமாக கவனம் தேவை. தங்கள் பிள்ளையின் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Tags:    

மேலும் செய்திகள்