இன்றைய ராசிபலன் - 02.06.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2024-06-02 06:11 IST

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 02.26 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.

திதி: இன்று காலை 5.25 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 07.30 - 08.30

நல்ல நேரம் மாலை: 03.30 - 04.30

ராகு காலம் மாலை: 04.30 -06.00

எமகண்டம் பிற்பகல்: 12.00 - 01.30

குளிகை மாலை: 03.00 - 04.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் பிற்பகல்: 01.30 - 02.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

ராசிபலன்

மேஷம்

புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். அதை சமாளிக்கும் வழி கிடைக்கும்.பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். பணப் பற்றாக்குறை விலகும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

ரிஷபம்

குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும். தாங்கள் நினைத்த கம்பெனியில் வேலை கிடைக்கும். இணையதளம் வாயிலாக வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனைவி வழியில் மதிப்பு கூடும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

மிதுனம்

அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கடகம்

எதிரிகள் தங்களிடம் சரணடைவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். தம்பதிகளிடையே சிறு சிறு சலசலப்புகள் உண்டாகும். பொறுத்து போவதும் அமைதி காப்பதும் நல்லது.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

சிம்மம்

உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். கொஞ்சம் விட்டுக் கொடுப்பது நல்லது. காரணம் இன்று மகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கன்னி

கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. சிலருக்கு தங்கள் துறை சார்ந்த வேலை கிடைக்கும். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

துலாம்

வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

விருச்சிகம்

வாகனம் ஓட்டும் போது அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். பிள்ளைகள் தங்கள் சொல்பேச்சை கேட்டு நடப்பர்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

தனுசு

வீட்டினை விரிவாக்க கூடுதல் அறை கட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனைவி வழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

மகரம்

பணியில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமா என்ற சந்தேகமும் வந்துபோகும். கட்சித் தலைமையுடனான மோதல்கள் விலகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள்,பிரச்சினைகள் தீர்ந்து மீண்டும் இணைவர்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கும்பம்

வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்து வந்து சேரும். உத்யோகத்தில் இடமாற்றம் பொருட்டு ஒரு சிலருக்கு உங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

மீனம்

தங்கள் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குழந்தைகள் கட்டளையை ஏற்பர். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்தால் தங்கள் வியாபாரம் மற்றும் உறவுகள் பலப்படும். பார்வைக் கோளாறு மற்றும் கை, கால் வலி வந்துபோகும்.

அதிர்ஷ்டநிறம் : பொன்னிறம்

 

Tags:    

மேலும் செய்திகள்