இன்றைய ராசிபலன் - 11.06.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update:2024-06-11 06:17 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம் : இன்று முழுவதும் ஆயில்யம்

திதி : இன்று மாலை 07.26 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.30 - 08.30

நல்ல நேரம் மாலை : 04.30 - 5.30

ராகு காலம் மாலை : 03.00 - 04.30

எமகண்டம் காலை : 09.00 - 10.30

குளிகை பிற்பகல் : 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் பிற்பகல் : 7.30 - 8.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பெண்களுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் தங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

ரிஷபம்

உடல் நலம் நன்கு மேம்படும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. தம்பதிகளிடையே அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பயணங்களின் போது தலைகவசம் அணியவும் மற்றும் செல்போன் பேச வேண்டாம்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

மிதுனம்

இரும்பு வியாபாரம் வருவாயை அதிகரிக்கும்.கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். தம்பதிகளிடையே மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

கடகம்

திருமணமாகாதவர்களுக்கு நல்ல ஒரு துணை அமையும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்தை தேர்வு செய்வீர்கள். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

சிம்மம்

கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கன்னி

சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

துலாம்

வேலை தேடுபவர்கள் நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்டநிறம் : இளஞ்சிவப்பு

விருச்சிகம்

கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

தனுசு

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : வான் நீலம்

மகரம்

குடும்பத்துடன் வெளியூர் பயணம் நடக்கும். அது தங்களுக்கு மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

கும்பம்

நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாக செல்வது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

மீனம்

வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். காதலர்களிடையே ஊடல் விலகும். தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகள் இழுத்தடிக்கும். உடல் நலம் தேறும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்



 


Tags:    

மேலும் செய்திகள்