இன்றைய ராசிபலன் - 08.06.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update:2024-06-08 06:07 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 26-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று இரவு 9.21 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.

திதி : இன்று மாலை 05.26 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் காலை : 09.00 - 10.30

எமகண்டம் பிற்பகல் : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் பிற்பகல் : 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம் மாலை : 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கல்வியில் வெற்றி உண்டு. உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

ரிஷபம்

வாக்குத் தொழிலால் லாபம் வந்தடையும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

மிதுனம்

தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் மகிழ்ச்சியும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தேகம் மின்னும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கடகம்

சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச வேண்டாம்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

சிம்மம்

வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. உடல் நலத்தில் முன்னேற்றம் கூடும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

கன்னி

வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். லாபத்தை அதிகரிப்பர். தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பர். புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

துலாம்

சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். வாக்குவாதமும் செய்ய வேண்டாம். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் பொறுமை அவசியம். காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். பணப் புழக்கம் மிகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது. புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

தனுசு

வெளிநாட்டுத் தொடர்பு லாபத்தை அள்ளும். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். தேகம் பலம்பெறும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

மகரம்

காதல் கண் சிமிட்டும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கும்பம்

பல் வலி, மூட்டு வலி வந்துபோகும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

மீனம்

தாய் மகன் அன்பு பலப்படும். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் வருகை உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

Tags:    

மேலும் செய்திகள்