பணச்செடி வளர்க்க விரும்புகிறீர்களா?

மணி பிளான்ட் செடியை போலவே டேவில்ஸ் ஐவி செடியை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது.;

Update:2023-09-03 10:38 IST

டேவில்ஸ் ஐவி செடியை பணச்செடியாக பார்த்தாலும் வேறுசில நன்மைகளையும் வழங்கக்கூடியது. இந்த செடியை வீட்டில் ஏன் வளர்க்க வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

* டெவில்ஸ் ஐவி, எபிபிரெம்னம் ஆரியம் என்று அழைக்கப்படும் இந்த செடியை வீட்டின் உள் அலங்கார செடியாக வளர்க்கலாம்.

* இந்த செடி காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக காற்றில் கலந்திருக்கும் பார்மால்டிஹைட், பென்சீன், சைலீன் போன்ற நச்சுகளை அகற்றி வீட்டின் உள்புறம் உலவும் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும். அதனால் சாலை, தெருவுக்கு அருகில் வசிப்பவர்கள் இந்த செடியை கட்டாயம் வளர்க்க வேண்டும்.

* வாஸ்து சாஸ்திரத்தில் இத்தகைய பணச்செடிகள் நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. அவை செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

* இந்த செடிக்கு குறைந்த பராமரிப்பே தேவைப்படும். இதற்கு சூரிய ஒளி அவசியமில்லை. வெயிலிலும், நிழலிலும், எத்தகைய ஒளி நிலையிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் வளர்ச்சிக்கு தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும்.

* இந்த செடிக்கு மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் உண்டு. இதன் அருகில் அமர்ந்து நேரத்தை செலவிடுவது மனதுக்கு ஓய்வு அளிக்கச் செய்யும். அமைதியான சூழலையும் உருவாக்க உதவும்.

* இந்த உள் அலங்கார செடி பசுமை சூழலையும் உணரச் செய்யும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். வீட்டுக்குள் இனிமையான சூழலையும் உருவாக்கி கொடுக்கும்.

* இவை கொடிபோல் பரந்து விரிந்து வளரும் தன்மை கொண்டவை. பால்கனி போன்ற இடங்களில் வளர்ப்பது அந்த இடத்திற்கு அலங்கார தோரணமாக மாறிவிடும். அங்கு அமர்ந்து ஓய்வெடுக்க மனமும் விரும்பும்.

* இந்த செடி எல்லா காலநிலைக்கும் ஈடுகொடுத்து வளரக்கூடியது. நண்பர்களுக்கு பரிசு வழங்குவதற்கு இந்த செடியையும் தேர்ந்தெடுக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்