வித்தியாசமான நடைமுறை

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உறைபனியில் இப்படி குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இது நார்வே மக்களிடையே பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை.;

Update:2023-10-01 22:00 IST

குளிர்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குளிரை தாங்கும் அளவுக்கு அவர்களது உடல்வாகு அமைந்திருப்பதில்லை. அதனால் குளிர்காலம் நெருங்கிவிட்டாலே பெற்றோர் குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். குளிரை சமாளிப்பதற்கு ஏதுவான ஆடைகளை வாங்கி கொடுப்பார்கள். குளிரை விரட்டும் கவசத்தை தலைக்கு அணிவிப்பார்கள்.

ஆனால் நார்வே நாட்டில் இதற்கு தலைகீழாக நடக்கிறது. அங்கு பனி காலம் தொடங்கிவிட்டால் சக்கர தள்ளுவண்டியில் குழந்தைகளை ஏற்றிவிடுகிறார்கள். விளையாடுவதற்குத்தான் குழந்தைகளை அதில் வைக்கிறார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். அதுதான் குளிர்காலத்தில் குழந்தைகளின் வசிப்பிடம். ஆம்! குளிர்காலத்தில் குழந்தைகள் வீட்டு படுக்கை அறைக்குள் சொகுசாக தூங்குவதில்லை. இந்த தள்ளுவண்டியில்தான் தூங்கவைக்கப்படுகிறார்கள். அதுவும் வீட்டுக்கு வெளியேதான்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உறைபனியில் இப்படி குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இது நார்வே மக்களிடையே பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை.

கடுமையான குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய அப்பகுதியின் குளிர் காலநிலைக்கு குழந்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்வதற்காக பெற்றோர்கள் இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் உறங்குவதை விடவும், வெளியில் அதிக நேரம் உறங்குவதை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.

குழந்தைகளை இப்படி குளிரில் நடுங்க விடுவது புதிய நடைமுறை அல்ல. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பின்பற்றப்படும் பாரம்பரிய பழக்கமாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்