அமைதி தவழும் தேசங்கள்

அப்படி 2023-ம் ஆண்டில் உலகின் மிகவும் அமைதியான தேசமாக அறியப்படும் சில நாடுகளின் பட்டியல் இது.

Update: 2023-07-02 06:50 GMT

பாதுகாப்பான வாழ்க்கை சூழல், குற்றங்கள் நிகழாத நிலை, சுகாதாரமான வாழ்க்கை முறை, நிலையான வாழ்வாதாரம், நிலையான அரசு, சமூக நல்லிணக்கம், உள்நாட்டு குழப்பமின்மை, அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விஷயங்கள் அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை நிர்ணயம் செய்பவையாக உள்ளன. உலக அரங்கில் அந்த நாட்டிற்கு நற்பெயரையும் பெற்றுக்கொடுக்கின்றன. அமைதியான தேசமாக அங்கீகரித்து தங்கள் நாட்டு மக்களை அந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு அனுமதிக்கின்றன. 

நியூசிலாந்து:

பசுமை சூழ்ந்த காடுகள் முதல் அழகிய கடற்கரைகள் வரை அற்புதமான நிலப்பரப்புகளுடன் அமைதியான சூழல் கொண்ட நாடாக காட்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலை பேணும் விஷயத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது. அமைதியான சமூகம், நிலையான அரசியல் அமைப்பு மற்றும் சமூக நலன் போன்றவை அந்நாட்டுக்கு உலக அரங்கில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுக்கின்றன.

பின்லாந்து:

'ஆயிரம் ஏரிகளின் நிலம்' என்று அழைக்கப்படும் பின்லாந்து அமைதியின் புகலிடமாக திகழ்கிறது. உலகின் மகிழ்ச்சியான நாடாகவும் விளங்குகிறது. பரந்து விரிந்த காடுகள், அழகிய ஏரிகள் மாயாஜால சூழலை உருவாக்குகின்றன. அங்கு கல்வி, புதுமை மற்றும் சமூக சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக அமைதியான சமூகம் கட்டமைக்கப்படுகிறது. வலுவான சமூக ஆதரவும், சுகாதாரமான வாழ்க்கை முறையும் மனநிறைவான வாழ்வியலுக்கு வித்திடுகின்றன.

ஜப்பான்:

பண்டைய மரபுகள், அதிநவீன தொழில்நுட்பம் ஆகிய இரண்டின் கலவையாக தனித்துவமான சமூகத்தை ஜப்பான் கட்டமைத்துள்ளது. சுய மரியாதை, ஒழுக்கம் மற்றும் சமூக ஒழுங்கை பின்பற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. அமைதியான மற்றும் இணக்கமான சூழலை உருவாக்க செய்கிறது. அந்நாட்டு மக்கள் இயற்கைக்கு அளிக்கும் மரியாதையும், குறைவான குற்ற விகிதங்களும், அமைதியான வாழ்க்கை முறையும் ஜப்பானுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

ஐஸ்லாந்து:

'இயற்கையின் அமைதிப் பூங்கா'வாக இந்த நாடு விளங்குகிறது. குளிர்ச்சியான சூழலை உணரவைக்கும் நீர்வீழ்ச்சிகள், வெப்பத்தை உமிழும் வெப்ப நீரூற்று கள், ஆக்ரோஷம் காட்டும் எரிமலைகள் என மாறுபட்ட நிலப்பரப்புகளை கொண்டது. எனினும் குறைவான மக்கள் தொகையும், அங்கு வசிக்கும் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் இயற்கையின் அழகுக்கு வலிமை சேர்க்க வைக்கிறது. அங்கு நிலவும் குறைந்த குற்ற விகிதமும், பாலின சமத்துவமும், சமூக ஒற்றுமையும் அமைதியான தேசமாக அங்கீகரிக்க வைத்துள்ளன.

கனடா:

பிரமிக்க வைக்கும் தேசிய பூங்காக்கள், அழகிய வனப்பகுதிகள் உட்பட மாறுபட்ட நில அமைப்பு கொண்ட தேசமாக கனடா காட்சி அளிக்கிறது. கனடியர்களின் பன்முக கலாசாரம், சகிப்புத்தன்மை, அரசியல் ஸ்திரத்தன்மை, மனித உரிமைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்ற விஷயங்கள் கனடாவை தொடர்ந்து உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்றாக அறிய வைக்கின்றன.

சுவிட்சர்லாந்து:

பனி மூடிய மலைகள், அழகிய ஏரிகள் மற்றும் வசீகரமான கிராமங்கள் உள்ளிட்ட அழகிய நிலப்பரப்புகள் சுவிட்சர்லாந்துக்கு பெருமை தேடி கொடுக்கின்றன. அரசியல் நடுநிலைமை, மாறாத பாரம்பரியம், திறமையான நிர்வாகம், உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் ஆகியவை சுவிட்சர்லாந்துக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குகின்றன.

ஆஸ்திரியா:

பழமை மாறாத கலாசாரம் மற்றும் இயற்கை அழகு அந்த நாட்டிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. வியன்னா, சால்ஸ்பர்க் போன்ற நகரங்கள் அமைதி யின் அடையாளமாக திகழ்கின்றன. ஆஸ்திரியர்கள் அமைதியான சூழலுடன் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கிறார்கள். அரசியல் ஸ்திரத்தன்மை, குறைந்த குற்ற விகிதங்கள், சமூக நலனுக்கான அர்ப்பணிப்பு உணர்வு போன்றவை அந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றன.

பூட்டான்:

பொருளாதார வளர்ச்சியை விட மக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இமயமலையால் சூழப்பட்ட பூட்டான் அழகான இயற்கை சூழலுக்கு புகழ் பெற்றது.

கலாசார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதியான சூழல், ஆன்மிக மரபுகள் ஆகியவை பூட்டானுக்கு பெருமை தேடி கொடுக்கின்றன.

போர்ச்சுகல்:

பிரமிக்க வைக்கும் கடற்கரை, அழகிய கிராமங்கள் மற்றும் இதமான காலநிலை ஆகியவை, போர்ச்சுகலுக்கு அமைதிக்கான அந்தஸ்தை தேடிக்கொடுக்கின்றன. சமூக நல்லிணக்கம், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் சமூக கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அந்நாடு அடைந்துள்ளது.

நார்வே:

அடர்ந்த காடுகள் மற்றும் அழகான கடற்கரை நகரங்கள் நார்வேக்கு பெருமை தேடி கொடுக்கின்றன. மேலும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், வலுவான சமூக அமைப்புகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவையும் ஒட்டுமொத்த அமைதிக்கு பங்களிப்பு செய்கின்றன.

டென்மார்க்:

உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. அங்கு சமூக சமத்துவம் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் சமூக உணர்வுடன் செயல்படுகிறார்கள். உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கிறார்கள். அமைதியான நகரங்கள், பாதுகாப்பான தெருக்கள், சிறந்த சுகாதாரம், சிறப்பான கல்வி அமைப்புகள் உலக அரங்கில் டென்மார்க்கின் மதிப்பை உயர்த்துகின்றன .

Tags:    

மேலும் செய்திகள்