கனடாவின் தென் மத்திய சஸ்காட்செவனில் அமைந்திருக்கும் நகரம், டேவிட்சன். காபி பிரியர்களிடம் இந்த நகரத்தின் பெயரை சொன்னால் சட்டென்று நினைவுக்கு வரும் அளவுக்கு அங்கு ஒரு நினைவுச்சின்னம் அமைந்திருக்கிறது. அது என்ன தெரியுமா? காபி கப்.
ஆனால் அது பானை அளவிற்கு பெரியது. சுமார் 24 அடி உயரத்தில் இந்த காபி கப்பை நிறுவி உள்ளனர். இதற்குள் 1 லட்சத்து 50 ஆயிரம் கப் காபிகளை சேமித்து வைக்க முடியும். 1996-ம் ஆண்டு இதனை அமைத்திருக்கிறார்கள். அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலின் சின்னமாக இதனை பொதுமக்கள் கருதுகிறார்கள்.
2010-ம் ஆண்டு கனடா நாட்டு தபால் தலையிலும் இந்த காபி கப் இடம் பெற்றுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் இது சிதைந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த நினைவுச்சின்னத்தை புதுப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.