மண் பானை தண்ணீரின் மகிமைகள்

மண்பாண்டம் பண்டைய கலாசாரத்துடன் இரண்டற கலந்தது. அன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்தது.

Update: 2023-04-30 14:00 GMT

சமைப்பது முதல் உணவு பொருட்களை சேமிப்பது வரை அனைத்து தேவைகளுக்கும் மண்பாண்ட வடிவிலான பொருட்கள் பயன்பாட்டில் இருந்தன. இதை இப்போது ஒருசில வீடுகளில்தான் பார்க்க முடிகிறது. விழா காலங்களில் பயன்படுத்துவதையும் காண முடிகிறது.

மண்பாண்டத்தின் மகிமையை இன்றைய தலைமுறையினர் உணர தொடங்கி இருப்பதால் மண்பாண்ட பொருட்கள் நவீன யுகத்துக்கு ஈடுகொடுத்து புது வடிவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. மண்பாண்டத்தில் குடிநீர் பருகு வதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். மண் பாண்டத்தில் சேமிக்கப்படும் குடிநீரை ஏன் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

இருமல்-சளி ஏற்படாது: குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் குளிர்ந்த நீரை அப்படியே பருகினால் தொண்டை எரிச்சல் ஏற்படலாம். சளி, இருமல் தொந்தரவுக்கு ஆளாகலாம். ஆனால் மண் பானை நீரை பருகுவது தொண்டைக்கு இதமளிக்கும். சளி, இருமல் பிரச்சினையை ஏற்படுத்தாது.

இயற்கை குளிரூட்டி: மண் பானையில் நிரப்பப்படும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாகிவிடும். பானையின் மேற்பரப்பில் உள்ள சிறிய துளைகள் வழியாக நீர் விரைவாக ஆவியாகும். அப்படி நீர் ஆவியாகும்போது பானையின் உட்புறப்பகுதியில் வெப்பத்தின் வீரியம் குறையும். அதனால் வெப்பநிலையும் கட்டுப்படும். கோடை காலத்தில் அந்த நீரை பருகுவது இதமளிக்கும்.

வெப்ப பக்கவாதத்தை தடுக்கும்: களிமண்ணில் தயாரிக்கப்படும் பானையில் சேமிக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது வெப்ப பக்கவாதத்தை தடுக்க உதவும். ஏனெனில் தண்ணீரில் கலந்திருக்கும் மதிப்புமிக்க தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை மண்பானை பாதுகாக்கும். உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் உதவும்.

பி.எச். சமநிலையை பராமரிக்கும்: நாம் உட்கொள்ளும் உணவில் பெரும்பாலானவை உடலில் அமிலமாக மாறும். களிமண் அமில உணவுகளுடன் தொடர்பு கொண்டு உடலில் பி.எச் சமநிலையை பராமரிக்க உதவும். அதனால் அசிடிட்டி மற்றும் இரைப்பை பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

செரிமானத்திற்கு உதவும்: மண் பானை தண்ணீரை தினமும் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். மேலும் மண் பானை தண்ணீரில் உள்ள தாதுக்கள் செரிமானத்திற்கும் உதவும்.

Tags:    

மேலும் செய்திகள்