தகவல்களை பரிமாறும் மரங்கள்
பல்வேறு மரங்களின் வேர்கள் நிலத்தடியில் பூஞ்சைகளின் வலைப்பின்னல் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.
ஒரு மரம் மற்ற மரங்களுடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொள்கிறது என்பதை கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளதல்லவா? ஆம்! ஒரு மரம் பூச்சிகளால் அல்லது விலங்குகளால் தாக்கப்பட்டால் தனக்கு அருகிலுள்ள மரங்களை எச்சரிக்க காற்றிலும், மண்ணிலும் ரசாயனங்களை வெளியிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு.
இதனால் அடுத்துள்ள மரங்கள் ஆபத்தில்இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ரசாயனங்களை தயாரிக்கின்றன. சரி... அவை எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்கிறீர்களா?
பல்வேறு மரங்களின் வேர்கள் நிலத்தடியில் பூஞ்சைகளின் வலைப்பின்னல் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. சில மரங்கள் தங்கள் சந்ததிகளை ஆதரிக்க வலைப்பின்னலை பயன்படுத்துகின்றன.
அதற்கேற்ப அந்த மரத்தின் வேர்கள் அடுத்துள்ள மரத்தின் வேர்களோடு இணைந்துள்ளன. இவற்றின் மூலமும் ரசாயன சமிஞ்சைகளை பரிமாறி ஒரு மரம் மற்ற மரத்தோடு தகவல்களை பரிமாறுகின்றன.