சமையல் டிப்ஸ்

Update: 2023-08-13 02:37 GMT

இட்லி மாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்தால், மாலை வரை இட்லி மென்மையாக இருக்கும்.

தயிரை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் தயிர் புளிக்காது.

குக்கர் மூடியின் உட்புறம் எண்ணெய் தடவி பருப்பை வேக வைக்கவும். அப்படி செய்தால் மூடியில் பருப்பு ஒட்டாமல் வேகும். பாத்திரத்தையும் எளிதாக கழுவி விடலாம்.

அரிசி, பருப்பு போன்றவற்றில் ஒரு பிரிஞ்சி இலை, ஒரு காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால் பூச்சி, புழு அண்டாது.

சப்பாத்தி, பூரி மாவு அதிகமாக இருந்தால், மீதி மாவின் மீது எண்ணெய் தடவி காற்று புகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை மாவு மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது தண்ணீரில் இரண்டு, மூன்று சொட்டு எண்ணெய் ஊற்றவும். பின்பு உப்பு போட்டு வேக வைத்தால் உரிக்க எளிதாக இருக்கும். சீக்கிரம் வேகவும் செய்யும்.

குக்கரின் கேஸ்கெட் பழுதடையாமல் இருக்க, இரவில் பிரிட்ஜில் பால் வைக்கும் இடத்தில் அதனை வைக்கவும். அவ்வாறு வைத்து பயன்படுத்தி வந்தால் கேஸ்கெட் இறுக்கமாக இருக்கும். நீண்ட நாளும் உழைக்கும்.

வாழைப்பழத்தை பேப்பரில் சுற்றிவைத்தால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

இளஞ்சூடுள்ள பாலில் ஒரு வர மிளகாய் போட்டு வைத்தால் கெட்டி தயிர் கிடைக்கும்.

-கீதா பிரேமானந்த், மாத்தூர், சென்னை.

Tags:    

மேலும் செய்திகள்