ரூ.7 கோடிக்கு சொத்து வைத்துள்ள பிச்சைக்காரர்

இந்தியாவில் வசிக்கும் அவர் உலகிலேயே பணக்கார பிச்சைக்காராகவும் அறியப்படுகிறார்

Update: 2023-07-09 05:57 GMT

பாத்திரம் ஏந்தி யாகசம் கேட்டு அதில் கிடைக்கும் தொகையில் பசியை போக்குபவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அப்படி மக்கள் கொடுக்கும் பணத்தை கொண்டு மூன்று வேளை சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்துவார்கள். உணவு உள்ளிட்ட இதரச் செலவுகள் போக மீதமாக இருக்கும் பணத்தை சேமிப்பாக மாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் யாசகத்தில் கிடைக்கும் பணத்தை கொண்டு பணக்காரர்களாக மாறுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவரின் சேமிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவில் வசிக்கும் அவர் உலகிலேயே பணக்கார பிச்சைக்காராகவும் அறியப்படுகிறார். அவரது பெயர் பாரத் ஜெயின். மும்பையில் வசிக்கும் அவர் வறுமை சூழலில் வளர்ந்தவர். அதனால் அவரால் படிப்பை தொடர முடியாமல் போனது. நிலையான வருமானம் ஈட்டும் வேலை பார்க்க முடியாமலும் போனது. கடும் போராட்டத்திற்கு மத்தியில் திருமண பந்தத்தில் இணைந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டார். அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு யாசகம் ஏந்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்.

பாரத் ஜெயின்

தன்னை போன்ற நிலை பிள்ளைகளுக்குக் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர், அவர்களை நன்றாக படிக்கவைத்துவிட்டார். விஷயம் அதுவல்ல. பாரத் ஜெயினின் இப்போதைய நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.7 கோடியே 50 லட்சம் என்று கூறப்படுகிறது. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு அவர் வசம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாரத் ஜெயின் வீடு வாங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு

அத்துடன் தானேயில் இரண்டு கடைகளை வாங்கியுள்ளார். அதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வருவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. பாரத் ஜெயின் மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அல்லது மும்பை ஆசாத் மைதானத்தில் பாரத் ஜெயின் யாசகம் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்