விமானங்களின் இறக்கைகளில் எரிபொருள் டேங்க் இருப்பது ஏன்?

பயணிகள் விமானத்தில் எரிபொருள் டேங்க், அதன் இருபுறமும் உள்ள இறக்கைகளில் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.;

Update:2023-07-31 17:12 IST

ஒரு விமானம் அதன் இறக்கைகளில் எரிபொருளை சேமித்து வைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் சமநிலையை பராமரிப்பதாகும்.

இறக்கைகளில் உள்ள எரி பொருள் டேங்குகள் நிரம்பியிருக்கும் போது, விமானம் புறப்படும் சமயத்தில் விமானத்திற்கு தேவையான வலிமை மற்றும் சீரான எடையை வழங்குகிறது.

விமானங்களுக்கு சரியான புவியீர்ப்பு விசை மையம் இருப்பது முக்கியம். வேறு இடத்தில் எரிபொருள் டேங்குகளை வைத்தால் ஈர்ப்பு மையமானது சமநிலையற்றதாக மாறிவிடும். இரு இறக்கைகளில் எரிபொருளை சமமாக பகிர்வதால் ஈர்ப்பு மையத்தை சரியாக பராமரிக்க முடியும். மேலும் இறக்கைகளை வெற்று இடமாக விடும்போது பறக்கும் நேரத்தில், அவை முறிந்து விடவும் வாய்ப்புள்ளது.

சீரற்ற தரையிறக்கத்தின் போது விமானத்தில் தீ போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால், எரிபொருள் டேங்க் ஆனது கேபினிலிருந்து சற்று விலகி இருப்பதால், விமானத்தில் பயணிப்பவர்களுக்கு அபாயத்தை குறைக்கிறது.

நீண்ட தூரப் பயணங்களில், விமானத்தில் இருக்கும் எரிபொருள் விமானத்தின் மொத்த எடையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும். இதனால் இறக்கைகளில் வைக்கும் போது விமானத்தின் கேபின்களில் அதிக இடம் இருப்பதால் பயணிகளுக்கும், உடைமைகளுக்கும் போதுமான இடத்தை அளிக்கிறது.

அதே நேரம் போர் விமானங்களில் விமானியின் இருக்கைக்கு பின்னால் தான் எரிபொருள் டேங்குகள் இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்