ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

சமையலில் அளவாக சேர்த்து கொள்ளப்படும் உப்புவின் சுவையான தகவல் தொகுப்பு இதோ...

Update: 2023-10-13 12:16 GMT

உப்பு நீரில் வளரும் ஒரே தன்மை கொண்ட தாவரம், மாங்குரோவ் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளே.

கடல் நீரில் 35 சதவிகிதம் உப்பு இருப்பதால்தான், அதை குடிக்க முடிவதில்லை.

திபெத்தியர்கள் உப்பைப் போட்டு தேநீர் அருந்துவது வழக்கம்.

போலந்தில் வெலிஷா நகரில் உள்ள உப்புச் சுரங்கம் மிகப்பெரியது. இங்கு உப்பால் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன.

காஸ்பியன் கடல்தான் உலகிலேயே மிகப்பெரிய உப்பு ஏரி என அழைக்கப்படுகிறது.

குளோரினும், சோடியமும் உப்பில் அதிகம் இருப்பதால், அதை அதிகம் பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் உண்டாகும்.

உப்பு நீரில் வினாடிக்கு 1560 மீட்டர் வேகத்தில் ஒலி ஊடுருவிச் செல்லும்.

மனிதர்களைப் போலவே விலங்குகளின் உடல் நலனுக்கும் உப்பு தேவை. ஆனால், இது தாவரங்களுக்கு நஞ்சு.

தினமும் 4 கிராம் உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்வது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவுக் கட்டுப்பாட்டு.

உலகில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. ஆண்டுக்கு 40.3 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது. சீனா (32.9), ஜெர்மனி (17.7), இந்தியா (14.5), கனடா (12.3) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்