சித்ரவதை மியூசியம்!

சித்ரவதைக் கருவிகளை சேகரித்து, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ‘ஷாகீத் மியூசியம்’ என்ற பெயரில் நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள்.

Update: 2023-10-06 12:13 GMT

ஈராக்கை சதாம் உசேன் ஆட்சி செய்த காலத்தில் குறிப்பிட்ட சில இன மக்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். சதாமுக்கு எதிராக போராடிய பலரைக் கைது செய்து, விதவிதமான கருவிகளால் கொடுமைப்படுத்தினர் அதிகாரிகள்.

அமெரிக்க ஆதரவு அரசு அங்கு ஆட்சி செய்தபோது, இந்த சித்ரவதைக் கருவிகளை சேகரித்து, தலைநகர் பாக்தாத்தில் 'ஷாகீத் மியூசியம்' என்ற பெயரில் நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் அந்தக் கருவிகளை அணிந்து பார்த்து, போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்