பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுத்தொழில்

கைத்தறியாடை இந்தியர்களின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெசவில் கிட்டத்தட்ட 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் இந்தியாவின் கிராமப் புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது.

Update: 2023-05-07 15:30 GMT

உலகம் முழுவதும் இருந்து உற்பத்தியாகும் ஆடைகளில், கிட்டத்தட்ட 95 சதவீத கைத்தறி ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய வரலாற்றில் முக்கியத் துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 1905- ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி தொடங்கப் பட்டது. இதனை நினைவு கூர்தல் மற்றும் கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக் கப்பட்டு வருகிறது.

நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது. தமிழ் நாட் டின் கைத்தறி பிரிவு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்கதும், நெசவாளர்களின் மிகச்சிறந்த கைத்திறனுக்கான பாரம்பரியத்தையும் கொண்டது. தமிழ்நாட் டில் தற்போது 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.51 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன.

கைத்தறி துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம்பெறவும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் இலவச வேட்டி-சேலை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 ஜோடி விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நல் வாழ்வு அறக்கட்டளை கீழ் நெசவாளர்களின் வாரிசு களுக்கு கல்வி உதவித் தொகை வழங் கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக் கான வட்டி மானியத் திட்டம், மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவை லாபகரமான தொழிலாக்குதல், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத் துதல், புதிய வடிவமைப்பு திறன்களை மேம்படுத்துதல், கைத்தறி துணிகளை சந்தைப்படுத்துதல், கைத்தறி துணிகளை பிர பலப்படுத்துதல். கைத்தறி நெசவாளர் நல் வாழ்வு அறக்கட்டளை கீழ் நெசவாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங் கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான வட்டி மானியத் திட்டம், மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசு கள் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவை லாபகரமான தொழிலாக்குதல், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துதல், புதிய வடிவமைப்பு திறன்களை மேம்படுத்துதல், கைத்தறி துணிகளை சந்தைப்படுத்துதல், கைத்தறி துணிகளை பிரபலப்படுத்துதல், பாரம்பரியமிக்க கைத்தறி நெசவை பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்கு விக்கும் வகையில் நிதியுதவி அளிக்க 'கைத் தறி ஆதரவு திட்டம்' போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

எனவே கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும் வகையில், அனைவரும் கைத்தறி துணிகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்திட வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்