தவளை போல் ஒலி எழுப்பும் 'கந்தக மார்பு தூக்கான் பறவை'
பல வண்ணங்களுடன் அமைந்த அலகைப் பெற்றிருப்பவை வானவில் அழகு தூக்கான் பறவை. இதனை ‘கந்தக மார்பு தூக்கான்’, ‘அடித்தட்டை அலகு தூக்கான்’ என்றும் அழைப்பார்கள்.;
தூக்கான் பறவை இனத்தைச் சேர்ந்த இவை, லத்தீன், அமெரிக்கா, தெற்கு மெக்சிகோ முதல் கொலம்பியா வரையான வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகின்றன. பெலீசு நாட்டின் தேசியப் பறவையாக உள்ள இதை 'பேரலகு பறவை' என்றும் குறிப்பிடுவர்.
நீளமான அலகு கொண்ட இந்தப் பறவை, அலகுடன் சேர்த்து 42 முதல் 55 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு மட்டும் 12 முதல் 15 செ.மீ. நீளம் கொண்டிருக்கும். குறிப்பாகச் சொல்வதென்றால், இந்தப் பறவையின் வண்ணமயமான அலகானது, தன்னுடைய உடலில் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றிருக்கும். இப்பறவை சராசரியாக 380 முதல் 500 கிராம் வரையான எடை யில் காணப்படும். கழுத்தில் மஞ்சள் நிறமும், உடலில் கருப்பு நிறமும், வாலின் நுனியில் நீலம் மற்றும் சிவப்பு நிறமும் காணப்படும்.
இப்பறவை தன்னுடைய காலில் நான்கு விரல்களைக் கொண் டிருக்கும். 2 மற்றும் 3- வது விரல்கள் முன்னோக்கியும், 1 மற்றும் 4- வது விரல்கள் பின்நோக்கியும் இருக்கும். இந்தப் பறவை, மரங்களின் மீது அதிக நேரத்தை செலவிடுவதால், மரக்கிளைகளில் தங்கி, ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தாவ இந்த விரல் அமைப்பு பேரு தவி செய்கிறது. இது ஒரு சமூகப் பறவையாகும். இவை 6 முதல் 12 என்ற எண்ணிக்கையில் சிறிய குழுவாக பறக்கும். இந்தப் பறவை எழுப்பும் ஒலியானது, தவளை கத்துவது போல இருக்கும். பழங்கள் தான் இந்தப் பறவையின் பிரதான உணவு. தவிர பூச்சிகள், விதைகள், முதுகெலும்பில்லாத சிறிய உயிரினங்கள், பல்லி, பாம்பு, சிறிய பறவைகள், அவற்றின் முட்டைகளைக் கூட சில நேரங்களில் சாப்பிடும். இந்தப் பறவைகள் பழங்களை சாப்பிடுவதைப்பார்க்க பிரம்மிப்பாக இருக்கும். ஏனெனில் இந்தப் பறவையினம், ஒரு பழத்தை தன் வாயில் இருந்து மற்றொரு பறவையை நோக்கி வீசி எறியும். மற்ற பறவை அதை கவ்விப் பிடித்து உண்ணும். சில பறவைகள் பழத்தை வைத்துள்ள பறவையின் அலகுக்குள் தன் அலகை நுழைத்து, பழத்தை பறிக்கவும் முயற்சிக்கும்.
இது பார்ப்பதற்கு, அவை பழத்திற்காக சண்டை யிடுவது போலவும், பந்து விளையாடுவது போலவும் தோன்றும். இந்த வண்ணமய அலகைக் கொண்ட பறவை, மரக்குழி ஒன்றை தேர்வு செய்து, அதில் ஒன்று முதல் நான்கு முட்டைகளை இடும். முட்டைகளை அடைகாப்பதில் ஆண், பெண் இரண்டும் பங்காற்றுகின்றன. 15 முதல் 20 நாளில் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். பிறந்த குஞ்சுக்கு இறக்கை இருப்ப தில்லை. இவை 3 வாரங்கள் கண் களை மூடியிருக்கும். 8 முதல் 9 வாரங்கள் வரை கூட்டில் வசிக்கும் குஞ்சுகள், அதன் பின் கூட்டை விட்டு வெளியேறும்.