சிங்கத்தின் சிறப்பு

சிங்கம் என்பது பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இந்த விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையை சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பர்.;

Update:2023-09-22 21:15 IST

பெரிய விலங்கு

சிங்கமானது பூனை பேரினத்தை சேர்ந்தது. பூனை பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு இதுவாகும். ஆண் சிங்கம் 150 முதல் 250 கிலோ வரை எடையும், பெண் சிங்கம் 120 முதல் 150 கிலோ கிராம் எடை கொண்டதாக உள்ளது. இந்த விலங்கு ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. அடர்ந்த காடுகளை சிங்கம் விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்புகின்றன.

கேட்கும் திறன்

இவை நல்ல கேட்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கி. மீ. வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகளான ஓநாய், கழுதைப்புலி முதலானவை எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.

இளைய சிங்கம்

நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்கு பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்து கொள்கிறது. சிங்கங்களின் ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 ஆண்டுகள். பெண் சிங்கங்களின் ஆயுட்காலம் 16 ஆண்டுகள் ஆகும். உடற்கூற்றின் படி இரு பாலினங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அந்த குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது.

ஆயுட்காலம்

மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக்கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது.

இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும், பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்களில் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தால் ஆண் சிங்கம், பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாக கொண்டுள்ளது.

விதி விலக்கு

ஒரு கூட்டத்தில் பொதுவாக 6 வயது வந்த பெண் சிங்கங்களும், 1 வயது வந்த ஆண் சிங்கங்களும், சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்