வெள்ளரிக்காயின் வியக்க வைக்கும் நன்மைகள்..!

வெள்ளரி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்

Update: 2023-08-04 07:35 GMT

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. வைட்டமின் ஏ, சி, கே, பொட்டாசியம், லுடீன், நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

* வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின்-கே மிக அதிக அளவில் உள்ளது. இதனால் எலும்பின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலுவடையும்.

* வெள்ளரிக்காய் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிக நல்லது. வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், சருமமும் பளபளப்பாகும். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால், சருமத்தில் உள்ள கறைகள் மறைந்துவிடும்.

* வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஏனெனில் வெள்ளரியில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. இது தவிர, வெள்ளரிக்காயால் எடை அதிகரிப்பு ஏற்படாது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதனால், அதைச் சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பியிருப்பதோடு, வீணாக எதையும் சாப்பிடவும் தோன்றாது. இதனால், வீண் எடை அதிகரிப்பு தவிர்க்கப்படும்.

* வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சாதாரணமாக, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

* மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதிலிருந்து விடுபடலாம். வாயு மற்றும் அஜீரண பிரச்சினைகளுக்கும் இது நிவாரணம் அளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்