மோனாலிசா ஓவியத்தின் ரகசியம்

உலக அளவில் புகழ்பெற்ற மிகச்சில ஓவியங்களில் மோனாலிசா ஓவியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.;

Update:2023-08-17 21:27 IST

உலக அளவில் இன்றும் வியத்தகு வகையில் பேசப்படுவது மோனாலிசா ஓவியம். இந்த ஓவியம் 16-ம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி எனவரால் பொப்லார் பலகையில் வரையப்பட்டதாக வரலாறுகள் கூறுகிறது. மோனாலிசா ஓவியத்திற்கு லா ஜியோகொண்டா ஓவியம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது. இது ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். உலக அளவில் புகழ்பெற்ற மிகச்சில ஓவியங்களில் மோனாலிசா ஓவியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான இந்த ஓவியம் தற்போது லூவர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படம் என்றும், கி.பி. 1503 முதல் 1506 வரையிலாக காலக்கட்டத்துக்குள் இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இதுவரையில் மோனாலிசா ஓவியத்தின் ரகசியத்தை யாரும் உறுதிபட தெளிவுபடுத்தவில்லை என்பது தான் உண்மை.

Tags:    

மேலும் செய்திகள்