பெண் கல்வியின் சிறப்பு
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.;
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையில் இன்றியமையாதது கல்வி. ஆனால் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் தான் வழிநடத்தும் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெறுவதற்கான முதல்படி கல்வி.
பெண் கல்வி கற்பதால் பல நன்மைகள் உள்ளன. படித்த பெண் பல்வேறு துறைகளில் ஆண்களின் வேலை மற்றும் சுமையை பகிர்ந்துகொள்ள முடியும். ஒரு சிறந்த கல்வி கற்ற பெண்ணால் எழுத்தாளராக, ஆசிரியராக வக்கீலாக, டாக்டராக, விஞ்ஞானியாக சமுதாயத்தில் பெருமை பெற முடியும். பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் கல்வி என்பது ஒரு பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்களை எதிர்த்து போராடுவதற்கான வலிமையை கல்வி தரும்.
எந்த ஒரு நாட்டின் முன்னேற்றமும், அந்த நாட்டில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திலேயே உள்ளது. எனவே பெண் குழந்தைகளை தவறாமல் படிக்க வைப்போம்.