பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்

சுற்றுசூழலை பாதுகாப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

Update: 2023-07-30 12:44 GMT

சுற்றுசூழல் என்பது இந்த பூமியை சுற்றியுள்ள இயற்கை மற்றும் செயற்கை பொருட்களின் ஒரு தொகுப்பே ஆகும். இப்பொழுது இருக்கும் அறிவியல் வளர்ச்சியில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கிறது. நாம் இந்த பூமியில் வாழ்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தாவரங்களும், விலங்குகளும் இந்த நிலப்பரப்பில் வாழ்வது அவசியம். பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் மாசடைகிறது.

சுற்றுசூழலை பாதுகாப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5-ந் தேதி (இன்று) உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2023 ஆண்டுக்கான "கருப்பொருள் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்". இது விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினத்தை அனுசரித்து வருகிறோம். மாசு கட்டுப்பாடு பிரச்சினையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் இந்த முயற்சி உறுதுணையாக இருந்து வருகிறது.

உணவில் கலந்த பிளாஸ்டிக்

இவ்வுலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வளவு பெருகுகிறதோ, அதே அளவு சுற்றுச்சூழல் பாதிப்பு பூமியில் வளர்ந்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணியாக இருப்பது நாம் அதிகமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் வளர்ச்சியாகும். பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பிளாஸ்டிக் மாசு அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ளது மற்றும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது நமது அழகிய கிரகத்தை அழித்து அனைத்து உயிரினங்களின் மீதும் தீங்கு விளைவித்து வருகிறது.

இப்போது நாம் சுவாசிக்கும் காற்றில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் உள்ளன. ஆர்டிக் பனியில் பிளாஸ்டிக் உள்ளது. மண்ணிலும் நமது உணவிலும் கூட பிளாஸ்டிக் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் மாற்றத்தை ஏற்படுத்த பல வழிகள் உள்ளது.

பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்

பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க உதவும் மூன்று இன்றியமையாத " R" கள் (REDUSE, RECYCLE, REUSE) "பிளாஸ்டிக்கை குறைக்க, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி". பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து, மேலும் நிலையான மாற்றுகளுக்கு மாறுவது முக்கியம். தண்ணீர் பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக்குகளை மறுபயன்பாடு செய்வது, நிலப்பரப்பு மற்றும் கடல்களில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் குறைக்க உதவும். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் ஒரு முக்கியமான படியாகும், ஏனெனில் இது புதிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தேவையை குறைக்கிறது. 3 ஆர்களைப் பின்பற்றுவதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதிலும், எதிர்கால சந்ததியினருக்கு நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் நாம் அனைவரும் பங்கு வகிக்க முடியும்.

அவசியம்

இந்த பூமி நம்முடைய தாய் போன்றது அதனை பாதுகாப்பதும், வளமை ஆக்குவதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும், நம்முடைய நாட்டில் ஏரளாமான நன்மை வாய்ந்த இயற்கை பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்துவோம். வளர்ந்து வரும் சந்ததியிடம் மற்றும் மக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியத்தை எடுத்துரைப்பது மிக அவசியம். இது நம் அனைவரின் கடமை என்பதை நினைவில் வைத்து கொள்வது அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்