இந்தியாவின் முதல் நவீன ஓவிய கலைஞர் ராஜா ரவிவர்மா
ராஜா ரவி வர்மா இந்தியாவின் முதல் நவீன ஓவியக்கலைஞராக அறியப்பட்டார். பழம்பெரும் காவிய நாயகிகளான 'துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி' போன்றோரின் உருவங்களை வரைந்து ராஜ ரவிவர்மா உலகப்புகழ் பெற்றார்.;
இவர் 1848-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் உமாம்பா-நீலகண்டன் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை, அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களை படைத்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில், 'எண்ணெய் வண்ண ஓவியக்கலையை (Oil Painting)' அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் 9 ஆண்டுகள் பயின்றார். பழம்பெரும் காவிய நாயகிகளான 'துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி' போன்றோரின் உருவங்களை வரைந்து ராஜ ரவிவர்மா உலகப்புகழ் பெற்றார். இவர் 1906-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி மரணமடைந்தார். அவர் இவ்வுலகத்தை விட்டு சென்றாலும், அவருடைய ஓவியங்கள் இன்னும் உயிர்பெற்று விளங்குகிறது. இதற்கு 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி டெல்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது 'யசோதையும், கிருஷ்ணனும்' ஓவியம் ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போனது சான்றாகும்.