பாண்டவர் பட்டி

தாவரத்தின் இலையை திரியாக சுற்றி அதன் மீது எண்ணெய்யை தடவி எரிப்பதன் மூலம் ஒரு விளக்கை போல ஒளிர தொடங்கும். `பாண்டவர் பட்டி' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தாவரம், ஒரு பசுமையான மருத்துவ குணமுடைய புதர் தாவரமாகும்.;

Update:2023-06-13 20:05 IST
பாண்டவர் பட்டி

ஒரு பச்சை தாவரத்தின் இலையின் நுனியில் எண்ணெய் தடவி எரிப்பதன் மூலம் வெளிச்சத்தை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், `காலிகார்பா டோமெண்டோசா' என்ற அறிவியல் பெயர் கொண்ட தாவரத்தின் இலையானது விளக்கு போல எரிந்து ஒளிகொடுக்கும் பண்பை கொண்டுள்ளது. இதன் இலையை திரியாக சுற்றி அதன் மீது எண்ணெய்யை தடவி எரிப்பதன் மூலம் ஒரு விளக்கை போல ஒளிர தொடங்கும். `பாண்டவர் பட்டி' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தாவரம், ஒரு பசுமையான மருத்துவ குணமுடைய புதர் தாவரமாகும். இதன் உயரம் அதன் இனத்தை பொறுத்து 1-5 மீட்டர் உயரம் இருக்கும். பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது இந்த இலையில் எண்ணெய் தடவி எரித்து வெளிச்சத்தை பெற்றதாக புராணங்கள் கூறு கின்றன.

இதனால்தான் இதற்கு 'பாண்டவர் பட்டி' என்று பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. இது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அதிகளவில் காணப்படுகிறது. இதன் பட்டை பேஸ்ட் போல தயாரிக்க ப் பட்டு தலைவலிக்கு மருந்தாக பயன்படுகிறது. இதன் தூள் ஈறுகளில் ஏற்படும் அழற்சியை சரிசெய்யவும், மேலும் முகத்தை அழகாக்கும் பேஸ்மாஸ்குகளிலும் பயன்படுகிறது. காயங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதிலும், குடல் புண்களை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பழங்கள் வனவிலங்குகளுக்கு உணவாகின்றன. இந்த தாவரமானது சமஸ்கிருதத்தில் 'பிரியங்கு' எனவும், மராத்தியில் 'ஜிஜாக்' எனவும் தமிழில் 'கட்டு-கே-குமிழ்' எனவும், தெலுங்கில் 'பொடிகா செட்டு' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் சிறப்பை அறிந்த மக்கள் பலரும், இதனை தங்கள் வீடுகளில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்