அது என்ன ஓஷனேரியம்?
மிகப் பெரிதான கடல் நீர் அக்வேரியம்தான் ஓஷனேரியம். விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும், நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம்தான் அக்வேரியம்.;
நம் வீட்டுக்குள் விதவிதமான மீன்களையும், பிற நீர்வாழ் உயிரினங்களையும் அழகுக்காக நீர்த்தொட்டிகளில் காட்சிப் பொருளாக்கி வைத்திருப்போம். கண்ணைக் கவரும் அந்தத் தொட்டிகளை 'அக்வேரியம்' என்போம். ஆனால், கடல் வாழ் உயிரினங்களை அதன் இடத்துக்கே சென்று பார்க்கும் இடங்களும் உள்ளன.
கடலுக்குள் கண்ணாடியில் பிரமாண்டமான குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தி சுற்றுலாப் பயணிகளை சுறா, திமிங்கலங்களின் அருகிலேயே அழைத்துப்போகும் இந்த வடிவமைப்புக்குப் பெயர் 'ஓஷனேரியம்'!