அதிசயகுணம் உள்ள உயிரினங்கள்

சில விலங்குகள் தங்கள் உடலில் குறிப்பிடத்தக்க உறுப்புகள் வெட்டப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அவற்றை மீளுருவாக்கம் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட சில விலங்குகளைப்பற்றி காணலாம்.;

Update:2023-09-04 20:30 IST

சாலமண்டர்

உலகெங்கிலும் 700-க்கும் மேற்பட்ட சாலமண்டர் இனங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மீளுருவாக்கம் கொண்டவை. சாலமண்டர்கள் தங்கள் வால்களை மீண்டும் வளர்க்கும் பண்பை பெற்றுள்ளன.

மெக்சிகன் டெட்ரா

இது நதியில் வாழும் ஒருவகை மீன். இவை இதய திசுக்களை மீண்டும் உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. மெக்சிகன் டெட்ரா பற்றிய ஆராய்ச்சி இதய நோய்களின் துறையில் முன்னேற்றங்களுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது.

ஆக்சோலோட்கள்

ஆக்சோலோட்கள் என்பது சாலமண்டரின் ஒரு நீர்வாழ் இனமாகும். இவற்றால் தன்னுடைய கை, கால்கள் அல்லது வேறு எந்த உடல் பாகத்தை இழந்தாலும் மீண்டும் உருவாக்க முடியும்.

சுறா மீன்

சுறாக்களால் உறுப்புகள் அல்லது பிற உடல் பாகங்களை மீண்டும் உருவாக்க முடியாது. ஆனால் தங்கள் பல் அமைப்புகளை மீண்டும் உருவாக்க முடியும்.

நட்சத்திர மீன்

இவை குறிப்பிடத்தக்க மீளுருவாக்க குணங்களைக் கொண்டுள்ளன. இவற்றால் புதிய கால்களை மீண்டும் வளர்ப்பது மட்டுமல்லாமல், இழந்த கால்களில் இருந்து ஒரு புதிய உடலையும் வளர்க்க முடியும்.

பச்சோந்தி

இவை தன்னுடைய நிறம் மாறும் திறனுக்காக நன்கு அறியப்பட்டவை. இவற்றால் வால் மற்றும் கை, கால்களை மீண்டும் உருவாக்க முடியும். அப்படி மீளுருவாக்கம் செய்யும் போது சேதமடைந்த நரம்புகள் மற்றும் தோலையும் குணப்படுத்திக் கொள்ளும்.

தட்டை புழுக்கள்

இவ்வகை புழுக்களை உடலின் நடுவில் வெட்டினால், ஒவ்வொரு பாதியும், அதன் மீதி பாதியை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

Tags:    

மேலும் செய்திகள்