மனதை கவரும் வண்ணத்துப்பூச்சிகள்

சிறிய கம்பளிப்புழுக்கள் அவற்றின் கூட்டுப்பு ழுப்பருவத்தை ஒரே வாரத்தில் முடித்து கொண்டு வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகின்றன.;

Update: 2023-06-13 15:04 GMT

கம்பளிப்புழு தன்னை சுற்றி ஒரு கூட்டை அமைத்து கொண்ட பிறகு, அது வண்ணத்துப்பூச்சியாக உருமாற தொடங்குகிறது. முட்டைப்பருவத்தில் இருந்து புழுப்பருவத் திற்கு வந்து கூட்டுப் புழு பருவத்தை அடையும் வரை, கம்பளிப் புழு நன்கு உண்கின்றன. இந்த சமயத்தில் இதன் முக்கிய வேலை தோலை உரிப்பது ஆகும். புழுப்பருவம் இனத்தை பொறுத்து மாறுபடுகிறது.

வண்ணத்துப்பூச்சி

சிறிய கம்பளிப்புழுக்கள் அவற்றின் கூட்டுப்பு ழுப்பருவத்தை ஒரே வாரத்தில் முடித்து கொண்டு வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகின்றன. ஆனால் சிலவகை பெரிய புழுக்கள் 2 ஆண்டுகள் கூட்டுப்புழுப்பருவத்தில் இருப்பதும் உண்டு. புழுப்பருவத்தின் முடிவில் அது ஒரு கூட் டினை அமைத்து, அதனுள் சென்று விடு கிறது. இவை இலைகளின் அடிப்பகுதி அல் லது மண்ணின் அடிப்பகுதியில் கூட்டினை அமைக்கின்றன. பெரும்பாலும் இந்த கூடுகள் பட்டினால் அமைக்கப்படுகின்றன. மழை பெய்யும் போது வண்ணத்துப்பூச்சிகள் மலர்களின் காம்புகளில் அல்லது புல்களின் மேல் அமருகின்றன. அவை அவற்றின் இறக்கைகளை பின்புறமாக மடித்துக் கொண்டு தலைகீழாக தொங்குகின்றன.

இலைகள் தான் உணவு

இறக்கைகள் மடித்த நிலையில் வண்ணத்துப் பூச்சிகளை கண்டுபிடிப்பது கடினமாகும். ஏனெனில் வண்ணத்துப் பூச்சிகளின் அடிப்புறத்தில் உள்ள வண்ணங்கள் மங்கலாக இருக்கும்.

உலகில் சுமார் 10 ஆயிரம் வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் பெரிய வண்ணத்துப்பூச்சிகளை காணலாம். பெரிய வண்ணத் துப்பூச்சிகளை சுவாலோடெய்ல்ஸ் என்று அழைப்பர்.

பெண் பூச்சிகளை விட, ஆண் பூச்சிகளின் வண்ணம் சிறப்பாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு பூச்சி 100 முதல் 3 ஆயிரம் முட் டைகளை தாவரத்தின் இலைகளில் இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் கம்பளிப்புழுக்கள் அந்த தாவரத்தின் இலைகளையே உணவாக உண்கின்றன.

பழங்களின் சாறு

அதனைத்தொடர்ந்து கூட்டுப்புழுப்பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக உருமாறுகின்றன. வளர்ந்த வண்ணத் துப்பூச்சிகள் சில வாரங்கள்தான் உயிர் வாழ்கின்றன. வண்ணத்துப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை பருகுகின்றன.

அதிகமாக கனிந்த பழங்களின் சாற்றை வண்ணத்துப் பூச்சிகள் உணவாக உண்கின்றன. இதில் இருந்து கிடைக்கும் சக்தி அவை பறந்து செல்வதற்கான ஆற்றலை கொடுக்கிறது. அனைவரின் மனதை கவரும் வகையில் பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்