உருகும் உலோகம் - காலியம்

மிக குறைந்த உருகுநிலையைக் கொண்டிருப்பதால், இது உருகுவதற்கு நமது உள்ளங்கையில் இருக்கும் வெப்பநிலையே போதுமானது.

Update: 2023-09-21 15:30 GMT

அசாதாரண பண்பு கொண்ட தனிமங்கள் பூமியில் பல காணப்படுகின்றன. அதில் ஒன்று தான் காலியம்(Gallium). இது சாதாரண வெப்பநிலையில் திடப் பொருளாக இருக்கும். 29.77 டிகிரி செல்சியஸ் உருகுநிலையைக் கொண்டிருப்பதால், இது உருகுவதற்கு நமது உள்ளங்கையில் இருக்கும் வெப்பநிலையே போதுமானது. 1875-ம் ஆண்டு `லெகோக் டி போயிஸ்பவுட்ரான்' என்பவர் காலியத்தை கண்டுபிடித்தார். இயற்கையில் துத்தநாகம், ஜெர்மானியம், அலுமினியம் போன்றவற்றுடன் சேர்ந்தே காலியம் காணப்படுகிறது. உயர் வெப்பநிலை வெப்பமானிகள், செமிகண்டக்டர்கள், எல்.இ.டி, டிரான்சிஸ்டர்கள், கணினிகள், லேசர் சாதனங்களிலும் இது பயன்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்