மரம் வளர்ப்போம்! மண்ணை காப்போம்!

உலகத்தில் மனிதனுக்கு முதல் நண்பன் மரம். ஆக்சிஜன் தரும் மரங்களை நாம் நினைப்பது கூட கிடையாது.;

Update:2023-08-27 20:50 IST

உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு நாள் விதைகளாக மண்ணில் விழுந்தவை. விதைக்க மறந்த மனிதன் அழிக்க மறக்கவில்லை. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 சிலிண்டர்கள் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறார். இந்த பயனை மரத்தினால் அடைகிறான். மரம் நட்டு பூமியை காப்போம். ஏனெனில் பூமிக்கு வேறு கிளைகள் இல்லை. கிளி வளர்த்தேன் பறந்து விட்டது. அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்துவிட்டது.

பறவைகள் வாங்கி கூண்டில் அடைத்து வளர்ப்பதை விட, ஒரு மரத்தை நடுங்கள். பறவைகளே அதில் நன்றாக கூடுகட்டி வாழ்ந்து கொள்ளும். உன் தேவைகளில் எல்லாம் நான் இருக்கிறேன். என் சோலைகளை எல்லாம் ஏன் அழிக்கிறாய். செல்போன் பார்க்கும் பல மணி நேரங்களில் ஒரு சில நிமிடம் ஒதுக்கி மண் பார்த்து மரம் நடுவோம். செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம் பூமி சூடாவதை எண்ணி கவலைப்படுவதில்லை.

இந்த உலகத்தில் மனிதனுக்கு முதல் நண்பன் மரம். ஆனால் மரத்திற்கு முதல் எதிரி மனிதன். ஒரு சில மணி நேரம் ஆக்சிஜன் தரும் மரங்களை நாம் நினைப்பது கூட கிடையாது. வெட்டப்பட்ட மரம் எல்லாம் மனிதனுக்கு விட்டு செல்கின்ற விதைகளே. மரம் இல்லையேல் மனித இனம் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்