ஆசியாவில் மிகப்பெரிய தொலைநோக்கி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது, ஜவ்வாதுமலை. இந்த மலையில் உள்ள சிற்றூர்களில் ஒன்று, காவலூர். இங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்த வான்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று செயல்படுகிறது.;

Update:2023-07-31 20:29 IST

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியால் திறந்து வைக்கப்பட்ட ஆராய்ச்சி மையம் இதுவாகும். இந்த இடம் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் உள்ள தொலைநோக்கியின் லென்ஸ், 2.3 மீட்டர் (90 அங்குலம்) அளவு கொண்டது. இந்த தொலைநோக்கி முற்றிலுமாக இந்தியர்களால், குறிப்பாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். இங்கு 6, 10, 13, 18, 24, 40, 48, 90 ஆகிய அங்குலங்களில் தொலைநோக்கிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் 48 அங்குல தொலைநோக்கியானது, ஜெர்மன், ரஷியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் கூட்டு தொழில்நுட்பத்தோடு வடிவக்கப்பட்டிருக்கிறது.

இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்த நிகழ்வுகளை, பெரிய பட்டியலே இட முடியும். இந்த தொலைநோக்கி ஆராய்ச்சி மையத்தை, ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கு மேல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பூமியைத் தவிர மற்ற அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துணைக் கோள்கள் காண்பிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்