கோலார் தங்கவயல்

உலகின் மிக ஆழமான 2-வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும்.;

Update:2023-06-20 21:49 IST

இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001-ம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் 1994, 97 மற்றும் 2000-வது ஆண்டுகளில் அமைக்கப்பட்ட 3 நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் 2010-ம் ஆண்டு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தன. அதில் கோலார் தங்க சுரங்கத்தில் 30 லட்சம் டன் தங்கம் இருப்பதாகவும் மேலும் 15 ஆண்டுகளுக்கு தங்கம் தோண்டியெடுக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கோலாரில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்