இன்றைய கல்விமுறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?

நம் முன்னோர்கள் இழை, தழைகளை அணிந்து இருக்கும் போது கூட கல்வி கற்பதற்காக பாடசாலையை நோக்கி தான் பயணித்தார்கள். ஆனால் இப்போது மாணவர்கள் பள்ளியை பார்த்து பயப்படுகிறார்கள்.;

Update:2023-07-28 19:30 IST

அன்றைய கல்வி முறை:

அன்றைய காலத்தில் இருக்கும் கல்வியை நாம் படிக்கும் இலக்கியங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். கல்வி, கேள்வி, போர்க்கலை, வித்தைகள், இலக்கியங்கள், இதிகாசங்கள் போன்றவற்றில் பல மாணவர்கள் சிறந்து விளங்கினர். அம்பேத்காரின் கல்வி மூலம் தான் சட்டம் உருவானது. பாரதியார் எழுதிய பாட்டு மூலம் தான் மக்களுக்கு சுதந்திர வேட்கை எழுந்தது. கல்வியின் மூலம் சாதித்த பல தலைவர்கள் நம் நாட்டில் உள்ளனர். பக்தி சார்ந்த இலக்கியங்களான தேவாரங்கள், ஆழ்வார் பாடல்கள் என பல பக்தி இலக்கியங்கள் அக்கால கல்வி வளர்ச்சியை எடுத்து காட்டுகின்றன. மேலும் சோழர் காலத்தை நாம் பொற்காலம் என்றே கூறலாம். ஏனெனில் அப்போது தான் கல்வி நிலையங்கள் நூலகங்கள் போன்றவை உருவானது. இதுபோன்ற கல்வியின் தேவையை அறிந்தும் உணர்ந்தும் படித்தார்கள்.

இன்றைய கல்வி முறை:

அன்றைய கல்வி முறையில் மாணவர்கள் படிப்பை விரும்பி படித்தனர். அதனால் தான் நமக்கு டாக்டர், அறிவியல் அறிஞர் காவலர்கள் போன்ற பலதுறைகள் உருவாகிறது. இன்றைய கல்வி முறையில் மாணவர்கள் பெற்றோரின் கட்டாயத்திலும் சமுதாயத்தின் கட்டாயத்திலும் படித்து வருகிறார்கள். ஒரு சில மாணவர்கள் மதிப்பெண்களுக்காக மட்டும் படித்து கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன படிக்கிறோம் எதற்கு படிக்கிறோம் என்று புரியாமல் படித்து வருகிறார்கள். பெற்றோர் பிள்ளைகளை மதிப்பெண்களுக்காக படிக்க சொல்வது தவறு. எல்லா மாணவர்களாலும் முதல் மதிப்பெண்களை பெற இயலாது. படிப்பது என்பது சுதந்திரமான மன நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்களின் கட்டாயத்தின் அடிப்படையில் இருக்க கூடாது.

கல்வியின் நோக்கம்:

கல்வியில் மதிப்பெண்ணை எடுப்பது மட்டும் குறிக்கோளாக இருக்க கூடாது. மதிப்பெண்களையும், சான்றிதழ்களையும் மட்டும் வைத்து யாராலும் சாதிக்க முடியாது. கல்வி மாணவர்களின் திறமையை வெளிகொண்டு வருவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துங்கள். அதை அவர்களுக்கு சுமையாக பயன்படுத்தாதீர்கள். கல்வி வேலை பார்த்து சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் தான் என்பதை புரிந்து பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைப்பது நல்லது.

முடிவுரை:

கல்வி மதிப்பெண்களுக்காக மட்டுமல்ல வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து ெகாள்வதற்கும் தான். ஓடிவிளையாடு பாப்பா எனும் பாரதியின் பாட்டை படிக்க வைத்து விளையாட நேரம் கொடுக்காமல் இருப்பது தவறல்லவா. கல்வியை கொடுங்கள், அளவோடு கொடுங்கள், பிள்ளைகளின் திறனை அறிந்து கொடுங்கள்....

Tags:    

மேலும் செய்திகள்