நகரங்களில் அதிகரிக்கும் நச்சுக்காற்றின் அடர்த்தி

ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான், புறஊதா கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை கட்டுப்படுத்தவும் செய்கின்றன.;

Update: 2023-06-02 14:38 GMT

உலகில் உள்ள உயிரினங்கள் காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடுகின்றன. நேர்மாறாக, தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன, பதிலாக ஆக்சிஜனை வெளிவிடுகின்றன.

இந்த வேதிவினை தொடர்ந்து நடைபெறவில்லை என்றாலோ, இதன் சமநிலை குலைந்தாலோ உலகம் உயிர்ப்புடன் இருப்பது சாத்தியமில்லை. மனிதர்கள் உயிர்வாழ உணவு, தண்ணீர் போன்றவை தேவைதான். என்றாலும், இவை அனைத்தும் இருந்தும் ஓரிடத்தில் ஆக்சிஜன் (காற்று) இல்லை என்றால், மனிதன் வாழ முடியாது. உடல் இயங்குவதற்கான சக்தியை உருவாக்குவதில் ஆக்சிஜன் பெரும் பங்காற்றுகிறது.

நமது நுரையீரல் 4 முதல் 6 லிட்டர் காற்றை சராசரியாக பிடித்து வைத்திருக்கக்கூடியது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் சுவாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.

ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான் (ஓசோன் படலம்), புறஊதா கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை கட்டுப்படுத்தவும் செய்கின்றன. நமக்கு இவ்வளவு நன்மைகள் செய்யும் வளிமண்டலத்தின் இன்றைய நிலைமை சொல்லிக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. பெருநகரங்கள், கடுமையாக மாசுபட்ட பகுதிகளின் மேலே உள்ள வளிமண்டலப் பகுதியில் அடர்த்தியான நச்சுக்காற்று சூழ்ந்து இருப்பதாக சர்வதேச விண்வெளி நிலையம் எச்சரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்