மரங்களின் முக்கியத்துவம்....
மரங்கள் என்பது கடவுள் நமக்களித்த அரிய படைப்பாகும். மரங்களின் வளர்ச்சி சுற்றுப்புற சூழலை பாதுகாக்கிறது.;
எவ்வளவு தான் அறிவியல் முன்னேற்றம் வந்தாலும் கூட இயற்கை செல்வங்களின் உறுதுணை மிக அவசியமானது. இயற்கையின் விதிகளுக்குட்பட்டே மனித வாழ்க்கை நடக்கிறது. அதில் மரங்களின் பயன்கள் மிகமிக அதிகம். மரங்கள் என்பது கடவுள் நமக்களித்த அரிய படைப்பாகும். மரங்களின் வளர்ச்சி சுற்றுப்புற சூழலை பாதுகாக்கிறது. மரங்களினால் மனித இனம் எண்ணற்ற பயன்களை பெறுகின்றன. மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு நாம் உயிர் வாழ ேதவையான ஆக்சிஜனை நமக்கு தருகிறது. காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை நமக்கு தருகிறது. வீடு கட்டுவதற்கும், பல வகையான மரச்சாமான்கள் பல உபயோகமான மருந்துகள் தயாரிக்கவும் மரங்கள் பயன்படுகின்றன.
மழைபொழிவுக்கு மரங்கள் தேவை:
மரங்கள் பல பறவைகள், மிருகங்கள் தங்குவதற்கு இருப்பிடமாக விளங்குகிறது. வீட்டு உபயோகத்திற்கு அடுப்பின் விறகாக பயன்படுகிறது. நிலத்தின் தன்மையை மாற்றாமல் அப்படியே வைத்து நிலத்தடி நீரை தூய்மையாக தருகிறது. மரங்களின் இலை, வேர், தண்டு, மொட்டு, பூ, காய், கனி ஆகியவை ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்திற்கு பயன்படுகின்றன. மழை பொழிவுக்கு மரங்கள் மிகவும் தேவைப்படுகின்றன.
மழைநீரால் ெபருகி வரும் வெள்ளம் மண் அரிப்பை உண்டாக்குகின்றது. மரங்களின் வேர்களோ மண் அரிப்பை தடுத்து நிறுத்துகின்றன. மரக்கூழிலிருந்து காகிதம் செய்யப்படுகின்றது. மரத்தின் பட்டையை கொண்டு தோல் பதனிடும் தொழில் நடைபெறுகிறது. தீப்பெட்டி, தீக்குச்சி போன்றவற்றை செய்வதற்கும் மரங்கள் பயன்படுகின்றன. மழையை தருகின்ற மரங்கள் இயற்கை பொக்கிஷங்கள். அதனால் தான் மத்திய, மாநில அரசுகள் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது.
முடிவுரை:
ஒரு நாடு வளமும், நலமும் பெற்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமெனில் அதற்கு மழை மிக முக்கியம். பசுமைப்புரட்சி ஏற்பட மழை தான் உதவி செய்கிறது. எனவே மரம் வளர்ப்பு ஒவ்வொருவரின் கடமை என்றே கூறலாம். பல வகைகளிலும் மனித சமுதாயத்திற்கு பயன்படும் மரங்களை நாம் ஒவ்ெவாருவரும் நட்டு வளர்த்து பேணி பராமரிப்போம்.