வேட்டையாடும் பெண் சிலந்திகள்

உழைப்பு என்று சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது எறும்பு தான். அதேபோல் விடாமுயற்சி என்றால் சிலந்தியை உதாரணமாக கூறுவர்.;

Update:2023-08-08 21:53 IST

சிலந்தி என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் வலைதான். இந்த வலை தான் சிலந்தி வாழ்வதற்கான இருப்பிடமாக உள்ளது. இதன் வாயில் இருந்து வரும் எச்சிலை கொண்டு இந்த வலை பின்னப்படுகிறது. இந்த வலையில் வந்து விழும் பூச்சிகளை இரையாக்கி கொண்டே சிலந்தி வாழ்கிறது. வலையின் ஆயுட்காலம் முடிந்து அது பழையதாக மாறும் போது, அந்த வலையை விட்டு, மற்றொரு வலையை பின்ன தொடங்குகிறது. கோடு போட்ட சிலந்தி, சிறிய சிலந்தி என பல்வேறு வகைகள் உள்ளன. ஆர்ப் வீவர் என்ற கோடு போட்ட வகையை சேர்ந்த சிறிய சிலந்தி கூட்டமாக சேர்ந்து கூடு கட்டுகின்றன. இந்த வகை சிலந்திகள் ஆப்பிரிக்காவில் உள்ள மழை காடுகளில் தான் அதிகமாக காணப்படுகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் காடுகளில் 2 மரங்களை இணைப்பது போன்றும், கிளைகளை இணைத்து பல மீட்டர் நீளம் கொண்ட வலையை பின்னும். இந்த சிலந்தியின் வலை எளிதில் அழிந்து போகாது. மழை, காற்று மற்றும் விலங்குகளாலும் சேதம் ஏற்பட்டுவிட்டால், உடனடியாக பல சிலந்திகள் கூட்டாக சென்று வேலை செய்து வலையை சரி செய்கின்றன. வலையில் வந்து விழும் உணவை எல்லா சிலந்திகளும் பகிர்ந்து உண்கின்றன. பெண் சிலந்திகள் வேட்டையாடுவது மற்றும் வலையில் உள்ள சிலந்திகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.

சிலந்திக்கு விஷ பை, உடலை விட்டு வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது. உடல், இரு பகுதியாக காணப்படுகிறது. மிகவும், நுண் அறிவுள்ளது. அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தான்வலை பின்னும், இதற்கு முக்கிய காரணம் உண்டு. இந்த நேரத்தில் தான், பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்க இந்த நேரத்தில் மட்டுமே வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. வலை வட்ட வடிவிலோ, எண் கோண வடிவிலோ தான் இருக்கும். இவற்றுக்கு, உணர்வு கொம்புகளோ, இறக்கைகளோ கிடையாது என்பதால் விலங்கியல் ஆய்வாளர்கள் பூச்சியினத்தில் சேர்ப்பதில்லை. சொல் வழக்கில் பூச்சி என்பது நிரந்தமாகி விட்டது. ஆண் பூச்சியை விட, பெண் பூச்சி உருவம், எடையில் பெரியதாக இருக்கும். சிலந்தியின் வயிற்றின் அடியில், இரண்டு சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் திரவத்தால் தான், வலை பின்னுகிறது. இந்த திரவத்தின் மீது காற்று பட்டவுடன், மெல்லிய கம்பி போல் மாறி விடுகிறது. தோட்டங்களிலும், காடுகளிலும் சிலந்திகள் பெரும்பாலும் வலைக்கு வெளியே இரையை எதிர்நோக்கி காத்திருக்கும். வீட்டு சிலந்திகள் வலைக்குள்ளேயே காத்திருக்கும். சிலந்திகளில் கடும் விஷத்தன்மை உடையவை உண்டு. ப்ளேக் விடோ, ப்ரவுன் ரெக்கள்ஸ் என்ற சிலந்திகள் கடித்தால் விஷம் ஏறும். இத்தகைய விஷச்சிலந்திகள் வட, தென் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்