சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?

மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை கட்டுரை.;

Update:2023-08-08 20:21 IST

நாம் மற்றும் நம் சந்ததி ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது நம் சுற்றுச்சூழல் ஆகும். அப்படிப்பட்ட இயற்கையை பாதுகாப்பது பற்றியும், பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை கட்டுரை வடிவில் இந்த பதிவில் அறிந்து ெகாள்ளலாம் வாங்க...

சுற்றுச்சூழல் என்பது இந்த பூமியை சுற்றியுள்ள இயற்கை மற்றும் செயற்கை பொருட்களின் ஒரு ெதாகுப்பே ஆகும். இப்பொழுது இருக்கும் அறிவியல் வளர்ச்சியில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் தீமைகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

நிலமாசு:

நாம் இந்த பூமியில் வாழ்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தாவரங்களும் இந்த நிலப்பரப்பில் வாழ்வது அவசியம். பாலீத்தின் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதாலும், புதைப்பதாலும் நிலம் மாசடைகிறது. நாம் தயாரிக்கும் ரசாயன பொருட்களில் இருந்து வெளிவரும் ரசாயன கழிவுகள் மற்றும் தாவரங்களில் கலக்கப்படும் யூரியா, பூச்சிக்கொல்லிகள் போன்ற செயற்கை உரங்கள் நிலத்தின் தன்மையை மாசுபடுத்துவது மட்டும் இன்றி அதை உண்ணும் மனிதர்களுக்கும் பல நோய்கள் உருவாகிறது.

நீர்மாசு:

இப்புவியில் நீரின் அளவு 1.386 பில்லியன் 3 கிலோ மீட்டர் அதில் 97.5 சதவீதம் உப்பு நீர் மற்றும் 2.5 சதவீத நிலத்தடி நீர் ஆகும். நீர் மாசுபடுவதற்கான முக்கிய காரணம் நீரை சேமிப்பதற்கான வடிகால் வசதி இல்லாமல் இருப்பதே ஆகும். தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வீட்டு கழிவுகள், குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் கலப்பதனாலும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரில் கிருமி நாசினிகளை பயன்படுத்துவதாலும் நீர் மாசு அடைகிறது.

ஒலி மாசு:

பெரும்பாலான ஒலிமாசு மனிதர்கள் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் எந்திரங்கள் மற்றும் மனிதர்கள் பேசும்போது வெளிப்படும் ஒலியென இப்புவி பல ஒலிகளால் மாசுகொண்டு இருக்கிறது. சூரியனிடமிருந்து தேவையான ஆற்றலை பூமி பெறுகிறது. கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ைஸடு போன்ற வாயுக்கள் வாயுமண்டலத்தில் பரவியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்