பயணிகளின் விமானம் அதிக உயரத்தில் பறப்பது ஏன்..?
35,000 அடி உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைந்து காணப்படும் காரணத்தினால் அது விமானம் முன்னோக்கி செல்லும் போது காற்றினால் உண்டாகும் எதிர் அழுத்த விசை (Drag) கணிசமாக குறையும்.
பொதுவாக பயணிகள் விமானம், வானில் 11 கி.மீ. தொலைவில் நிலையாகப் பறக்கின்றன. இந்த உயரத்தில் பறக்கும்போது, விமானத்தின் வடிவமைப்புக்கு ஏற்ப எரிபொருள் சிக்கனமாகிறது. மேலும் அங்கு நிலவும் 55 டிகிரி செல்சியஸ் குளுமையான வெப்பநிலை விமான என்ஜின்களுக்கும் சிறப்பானது. இந்த உயரத்தில் பறக்கும்போது காற்றழுத்தம் சீராக இருப்பதால் விமானம் தடுமாறாமல் செல்லும். அதனால்தான் பயணிகள் விமானம், மற்ற விமானங்களை விட உயரமாகப் பறக்கிறது.