சூரியன் ஒளிர்வது எப்படி?
நாம் நம்புவதற்கு சற்று கடினமானது எதுவென்றால் நாம் காணும் நட்சத்திரங்கள் இரவில் பிரகாசிக்கின்றன. சூரியன் பகலில் ஒளிர்கிறது. ஆனால் இரண்டும் ஒரே வகையை சார்ந்தது என்றால் நம்புவது சற்று கடினமாக தான் இருக்கிறது.;
நட்சத்திரம்
ஆம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் தான். உண்மையிலேயே இதுதான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆகும். இந்த சூரிய ஒளி இல்லையென்றால் உலகில் உயிரினங்கள் தோன்றி இருக்க வாய்ப்பு இல்லை.சூரியனானது பூமியில் இருந்து 93,000,000 மைல்கள் தொலைவில் உள்ளது. இதனுடைய சுற்றளவு பூமியை விட 1,300,000 மடங்கு பெரியது மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சூரியன் பூமியை போல கடினமான தன்மையற்றது.
சூரியனின் வெப்பமானது அதனிடத்தே 6 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு ஆகும். இந்த அளவு வெப்பமானது எந்த ஒரு உலோகத்தையோ, அல்லது பாறைகளையோ வாயுவாக மாற்றக்கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது. ஆகவே சூரியன் ஒரு வாயு மண்டலம் என்றே கூறலாம்.
ஆய்வு
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சூரியனின் வெப்பத்துக்கு காரணம் அது எப்பொழுதும் எரிந்து கொண்டு இருப்பதுதான் என்று விஞ்ஞானிகள் கணித்தனர். ஆனால் எந்த ஒரு பொருளும் இத்தனை நூற்றாண்டுகளாக எரிந்து கொண்டு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஆனால் பின்னர் நடைபெற்ற ஆய்வில் சூரியனில் ஏற்படும் வெப்பம் இன்றைய அணுசக்தியை போன்றது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதாவது சூரியன் தன்னிடம் உள்ள பொருளை ஆற்றலாக மாற்றுகிறது. இது எரிதலில் இருந்து வித்தியாசமானது ஆகும். விஞ்ஞானிகள் கூற்றுப்படி இது உண்மையானால் சூரியன், முறையாக தொடர்ந்து தன்னிடம் உள்ள பொருளை ஆற்றலாக மாற்றுவதால் ஒளிர்கிறது. இதன் மொத்த எடையில் 1 சதவீதம் 150 ஆயிரம் மில்லியன் வருடங்களுக்கு வெப்பத்தை அளிக்க வல்லது என்று தெரிய வருகிறது.