தண்ணீரில் நடக்கும் 'பாசிலிகஸ் பல்லி'
தண்ணீரில் நடக்கும் இந்த பல்லி இனத்தை, அமெரிக்க வாழ் மக்கள் ‘ஜீசஸ் பல்லி’ என்று அழைக்கிறார்கள்.;
மத்திய அமெரிக்காவில் அதிகம் காணப்படும் பல்லி இனம், 'பாசிலிகஸ்'. கிரேக்க மொழியில் 'பாசிலிகஸ்' என்பதற்கு 'அரசன்' என்று பொருள். இந்த பல்லிகள் சுறுசுறுப்பற்றவை. மரங்களில் வாழும் இந்த பல்லி இனம் மெக்சிகோவில் இருந்து நில நடுக்கோட்டு பிரதேசங்கள் வரை பரவி காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந் திருக்கும் போது, தன்னை இரையாக உட்கொள்ள வரும் உயிரினங்களிடம் இருந்து காத்துக்கொள்வதற்காக, இவை மரங்களின் அடியில் காணப்படும் நீர்ப்பரப்பில் குதித்து, அதன் மேற்பரப்பில் நடக்கின்றன என்று, இதனைப்பற்றி ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீரில் நடக்கும் இந்த பல்லி இனத்தை, அமெரிக்க வாழ் மக்கள் 'ஜீசஸ் பல்லி' என்று அழைக்கிறார்கள். இந்த பல்லிகள், பிறக்கும் போது 2 கிராம் எடையும், பெரியதாக வளர்ந்த பின் 200 கிராம் எடையும் கொண்டி ருக்கும். இவ்வகை பல்லிகள், தங்களின் உருவ அமைப்புக்கேற்ப தண்ணீரில் நடக்கின்றன. 'இந்த பல்லிகள் தனது கால்களினால் சக்தியை உருவாக்குகின் றன. அந்த சக்தியை காலில் சேமித்து வைத்து, நடக்கத் தொடங்கும் வேளையில் அதை பயன்படுத்துகின்றன' என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த பாசிலிகஸ் பல்லி, தண்ணீரின் மேல் ஒரு நொடிக்கு 5 அடி முதல் 15 அடி வரை ஓடும். இவற்றால் தண்ணீரில் நீந்தவும் முடியும்.
இந்தப் பல்லி ஒரு அனைத்துண்ணி ஆகும். பழங்கள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், சிறுவகை பாலூட்டிகள், அணில் போன்ற கொறிணி வகை உயிரினங்கள், சிறிய பல்லிகள், சிறு பறவையினங்கள், பாம்புகளையும் இரையாக உண்ணும். பெண் பல்லி இனப் பெருக்கம் செய்து, ஒரு முறையில் 5 முதல் 15 முட்டைகள் வரை இடும். அந்த முட்டை களில் இருந்து 8 முதல் 10 வாரங்களில் குட்டிகள் வெளிப்படும். முட்டையில் இருந்து வெளிப்பட்ட அடுத்த நொடியே, இவ்வகை பல்லிகள் தன்னிச் சையாக செயல்படத் தொடங்கிவிடுகிறது.