மோட்டார் சைக்கிள் உருவான வரலாறு
முன்னோடியாக விளங்குவது 1885-ம் ஆண்டு டேம்லர் தயாரித்த மோட்டார் சைக்கிள் தான் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.;
மோட்டார் சைக்கிள்... இந்த வார்த்தையை விரும்பாத இளைஞர்களை காண முடியாது. ஏன் இப்போதெல்லாம் இளம் பெண்கள் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் களில் சர்வ சாதாரணமாக செல்கிறார்கள். எந்த ஒரு சாலையை உற்று நோக்கினாலும் ஒரு நிமிடத்துக்குள் ஒரு மோட்டார் சைக்கிளை நாம் பார்த்துவிடலாம். இத்தகைய பெருமை மிகுந்த வாகனத்தை கண்டுபிடித்தவர்கள் மற்றும் அதன் வரலாறு பற்றி இக்கட்டுரையில் பார்ப் போம்.
ஜெர்மனை சேர்ந்த கோட்லியப் டேம்லர் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர் வில் ஹெல்ம் மேபேக் தான் மோட்டார் சைக்கிளை முறையாக உருவாக்கியவர்கள். அவர்கள் உருவாக்கிய மோட்டார் சைக்கிள் 1885-ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த ராய் பெஹ்னர் மற்றும் ரே பெஹ்னர் என்ற இருசகோதரர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களான ஜிம் கார்ல்டன் மற்றும் ஹாப்மேன் ஆகியோர் டேம்லர் உருவாக்கிய மோட்டார் சைக் கிளின் நூற்றாண்டு தினத்திற்குள்ளாக புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் மாதிரியை உருவாக்க திட்டம் தீட்டினர்.
இதற்காக சகோதரர்கள் 2 பேரும் வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள கேரேஜ் ஒன்றினை பயன்படுத்தினர். ஏறக்குறைய 9 மாதங்கள் 4 பேரும் கடுமையாக உழைத்து உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரியை 1985-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி உருவாக்கினர். அதனை இயக்கியும் காண்பித்தனர்.
தற்போது இந்த மோட்டார் சைக்கிள் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத் தில் உள்ள 'மோட்டார்சைக்கிள் ஹால் ஆப் பேம்' என்ற மோட்டார் சைக்கிள் களுக்கான அருங்காட்சியகத்தில் காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை காண ரே பெஹ்னர் அங்கு கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். அப்போது அவர் கூறும்போது "இந்த மோட்டார் சைக்கிளை நாங்கள் உரு வாக்க திட்டமிட்டபோது பிளூபிரிண்ட் போன்ற துல்லியமான அளவீடுகள் எதுவுமின்றி வெறும் ஒரு புகைப்படத்தை மட்டுமே கொண்டு வேலையை தொடங் கினோம்". "நான் மர வேலை செய்பவன். அதனால் இந்த மோட்டார் சைக்கிள் பிரேம் மற்றும் சக்கரங்கள் உருவாக்கும் பணியில் நான் முதலில் இறங் கினேன். எனது சகோதரர் ரே இதற்கான பொறியியல் வேலைகளை செய்தார். கார்ல் டன் மற்றும் ஹாப்மேன் ஆகியோர் தினமும் உதவி புரிந்து வந்தனர். இந்த வேலை அவ்வளவு எளி தானதாக எங்களுக்கு அமைய வில்லை" "ஒரிஜினல் மோட்டார் சைக்கிளை விடவும் நாங்கள் உருவாக்கிய மோட்டார் சைக் கிள் அளவில் சற்று பெரியது. எப்போதும் ஒரிஜினலை போன்றே நகல் தயாரிப்பது என்பது துல்லியமாக இருப்பதில்லை" என கூறினார்.
மாதிரி மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் பணி 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1985– -ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி நிறைவடைந்தது. நவீன காலத்தில் சீறிப்பாயும் வேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்பட் டாலும் அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது 1885-ம் ஆண்டு டேம்லர் தயாரித்த மோட்டார் சைக்கிள் தான் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.