ஆரோக்கியம் தான் வாழ்வின் ஆனந்தம்!

வாழுமிடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம். சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக் கியம் என்பன தொடர்பானதாகும்.

Update: 2023-09-21 15:52 GMT

தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத் திருப்பதே சிறந்த சுகாதாரம். இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது தொற்று நோய்களாகும். நாம் சுத்த மாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம்.

நாம் சுத்தமாக இல்லாவிடில் நோயாளியாகி விடுவோம். நல்ல ஆரோக்கியம் என்பது மிகப் பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும். ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோஷமான மனிதனின் வெற்றியின் ரகசியமாகும். ஒரு ஆரோக்கியமான மனித னால்தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனு பவிக்க முடியும். சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதனால் ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும். சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை உண்டாக்கி வாழ்வை இருளாக்கி விடும். நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கின்ற குடும்பத்தினர் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் உளவியல் ரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும். வாழுமிடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம். சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் என்பன தொடர்பானதாகும். ஊட்டசத்துள்ள உணவுகளை உண்ணல், நிம்மதியை தருகின்ற வேலை, தரமான சுகாதார சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் இவை அனைத்தும் கிடைக்க பெறுவதே சிறந்த நலவாழ்வாகும். சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், சுகாதார உளாகத்தை பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கை களை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப் போது கிருமி நாசினி ஜெல் அல்லது சோப் போட்டு கையைக் கழுவக்கற்றுக் கொடுங்கள். மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும், பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும்.

நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நம் உடல் நலத்தில் நம் உடுத்தும் ஆடைகளுக்கும் பங்குண்டு. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் நன்றாகத் துவைத்த, தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். தூய்மையான ஆடைகளே எப்போதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

உடல் சுத்தத்தில் கவனம் செலுத்துவதுபோல நாம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தூய்மையான காய்கறிகள், சமையல் பொருள்களைப் பயன்படுத் தியே உணவு தயார்செய்ய வேண்டும். உணவு தயார் செய்வதற்கு முன்பும், உணவுப் பொருள்களைத் தொடுவதற்கு முன்பும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உணவுப் பொருள்களை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். வெளியில் உள்ள கடைகளில் சாப்பிட நேரும் சமயங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளதா என்பதை அறிய வேண்டும். அதன்பின்னர் உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். சாப்பாடு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர் தூய்மையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்