'டேஞ்சர்' சண்டே!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே உலகெங்கிலும் உள்ள பல நாட்டு மக்களுக்கும் ‘விடுமுறை நாள்’ என்ற நினைப்புதான் வரும்.

Update: 2023-07-14 14:00 GMT

ஆனால் இந்த ஓய்வான... அமைதியான நாளுக்கும், உலகத்தையே நடுங்கச் செய்த அநேக சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு நம்மை வியப்படையச் செய்கிறது. அதை தெரிந்து கொள்வோமா...

* வாட்டர்லூ போரில் மாவீரன் நெப்போலியன் கடைசியாகத் தோல்வியுற்றது 1815-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைதான்.

* அமெரிக்கப் போர்க் கப்பல்கள் ஸ்பானிஷ் கடற்படையை நிர்மூலம் ஆக்கியதும் 1898-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான்.

* 1914-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி ஞாயிறன்று நேசப் படைகள் ரோமாபுரி நகரத்தைக் கைப்பற்றி ஹிட்லரின் வெறியாட்டத்திற்குச் சவக்குழி தோண்டியது.

* 1944-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி ஞாயிறன்று ஐரோப்பாவில் போர் நிறுத்தப்பட்டு ஹிட்லரின் சாம்ராஜ்ஜிய கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

* ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அணுகுண்டு வீசப்பட்டது. அதே ஆண்டு ஒரு செப்டம்பர் ஞாயிறு அன்று மிஸோமி என்ற போர்க் கப்பல் ஜப்பானியர்களால் நொறுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்