'எல்லை'யில்லா பிரச்சினை..!
நாட்டின் எல்லைகளை மையப்படுத்தி பஞ்சமில்லா பிரச்சினைகள், உலகெங்கும் நிலவிக் கொண்டிருக்கின்றன.
எப்போதும் ஏதாவது ஒரு மூலையில் எல்லைத் தகராறு இந்த பூமியில் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவிற்குள் சீனா எல்லை தாண்டி வந்து டென்ட் போட்டது போல அடாவடிகள் நடக்கின்றன. மற்றொரு பக்கம் பாகிஸ்தானும் இத்தகைய அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுகிறது. நமக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும், இதுபோன்ற எல்லை பிரச்சினைகள் இருக்கின்றன.
இஸ்ரேல்-பாலஸ்தீன சிக்கல், ரஷியா-செசன்யா தகராறு, சீனா-தைவான் உறவுப் பிரச்சினை, சூடான்-தெற்கு சூடான் பிரிவினை பஞ்சாயத்து, கம்போடியா-தாய்லாந்து தகராறு, இரண்டு கொரியாக்களுக்கு இடையே நிலவி வரும் பதற்றம் என நாட்டின் எல்லைகளை மையப்படுத்தி பஞ்சமில்லா பிரச்சினைகள், உலகெங்கும் நிலவிக் கொண்டிருக்கின்றன.