பாரதியார் கற்பனையில் பாரத தேசம்
அக்கினி குஞ்சொன்று கண்டு அது காடுகளை பற்ற வைக்கும் நெருப்பை போன்று, சுதந்திர நெருப்பை நாடு முழுக்க பறக்க விட வேண்டும் என கனவு கண்டார் பாரதியார்.;
"அச்சமில்லை அச்சமில்லை" என்று ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அச்சாணியை கவிதையால் தளர்வடைய செய்த எங்கள் தமிழ் தலைவனே. விண்ணதிர தமிழ் மண்ணில் விடுதலை தழைக்க, தாய் மொழிக்கு கவிதை நெருப்பை கலந்து தந்தாய் நீ. அதுமட்டுமா, சுதந்திர விதையை கலந்து, தமிழ் மண்ணில் விதைத்த எங்கள் கவிதை போராளி பாரதி. அவர் கனவுகள் கற்பனை அல்ல. அதை நிகழ்த்தி காட்டியவர்.
தமிழ் மண்ணில் ஆடுவோமே! பள்ளு படுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என 1935-ம் ஆண்டே பாடிய எங்கள் தமிழ் மண்ணின் மைந்தன்.
பாஞ்சாலிக்காக கலங்கிய பாரதி மனது, பெண் விடுதலைக்கும் தவித்தது. நிவேதிதா வழி நின்று செல்லம்மாவை விழி கலந்து செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து, பெண் விடுதலைக்கும் முரசு அறைந்தார் பாரதி.
முறுக்கிய மீசை பாரதியின் கவிதை, ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை நறுக்கும் வெட்டு கத்தியாக திகழ்ந்தது. இந்திய மண்ணில் கனல் கக்கும் கவிதையால் ஆங்கிலேயன் புழுவாய் துடித்தான். புதுச்சேரி தப்பி சென்றும், தாய் மண்ணின் விடுதலைக்காக தலை மேல் குற்றவாளி பட்டம் சுமந்து தமிழ் மண்ணின் விடுதலைக்காக மீண்டும் கவிதை போராட்டம். அது "இந்தியா" என்ற பத்திரிகையில் இதயமாய், கவிதை உயிரோட்டத்தை குருதியின் வடிவில் தந்த தமிழ் சந்திரன் எங்கள் பாரதி. மன்னர்களுக்கு கவிதை எழுதிய காலத்தில் தமிழ் மண்ணுக்காக விடுதலை கீதம் இசைத்து, தமிழ் மண்ணில் பூத்த கலங்கரை விடுதலை கவிதை விளக்கு பாரதி. அவர் கற்பனை திறன் முண்டாசும் அறியா அதிசயம். சாதியத்தை சாடிய சரித்திரம். சாதியை ஒழிக்க கவிதைக்கு பயிற்சி கொடுத்த தமிழ் ஆசான் எங்கள் பாரதி."காக்கை குருவியும் எங்கள் சாதி" என சாத்திரம் பாடிய கவிதை மன்னன்.
சுதந்திர கவிதை படைத்த பிரம்மன். சாகும் போதும் எமனுக்கு கட்டளை விடுத்தவன். வாழும் போதும் பரங்கியரை கவிதையால் சாடியவன். எட்டையபுரம் ஏற்றம் பெற வேண்டும் என கனவு காணவில்லை. எட்டு திக்கும் தமிழ் மண்ணின், தமிழ் மொழியின் பெருமை பறைசாற்ற எண்ணினார்.
தன் கவிதையால் ஆங்கிலேயனுக்கு முடிவுரை எழுத எண்ணியவர் பாரதி. பாரதம் விடுதலை பெற, கவிதை பேராயுத்தத்தை கூராயுதமாக மாற்றிய பிரம்மன். கற்பனையில் உதித்த அத்துனையும் கவிதையில் குவித்த குவி ஆடி பாரதி.